பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#47 உரியகாலத்தே செய்த நன்றி சிறிதென்ரு லும், அது ஞாலத்தினும் மிகச்சிறப்புடையதாகும்! -இது வள்ளுவ வாசகம். இவ்வாசகத்தில் காலத் தின் மாண்பு பெரிதுபடப் பேசப்படுவதை பார்க் (கிருேம் நாம். ஒரு சமயம், உமா அலுவல்கத்திற்கு அவசரம் அவசரமாக நடந்து கொண்டிருந்தேன். கடிகாரம் மட்டும் காலத்தை மறைக்கவில்லை; அன்றைய மந்தாரமும் காலத்தை மறைத்து விட்டது. பத் திரிகைத் தலையங்கம் எழுதவேண்டிய பொறுப்புத் தான் என்னை அவ்வாறு விரைவுபடுத்தியது அவ சரத்தோடு அவசரமாக, காலத்தைத் திருத்திக் கொண்டேன். அதாவது, கடிகாரத்தைச் சரிப் படுத்திக் கொண்டேன். வழியில் ஒருவர் தலை போகிற அவசரத்தோடு, 'ஸார், மணி என்ன?” என்று அலறினர். நின்று நிதானமாக மணியைச் சொன்னேன். உடனே அந்த மனிதர் வெகு அலுப் புடன், பூ! இவ்வளவுதான?' என்ருரே, பார்க், கலாம். காலத்தை அவரது அந்த 'பூ' என்னும் குறிப்பு எவ்வளவு துச்சமாக்கி விட்டது. அந்தப் புண்ணியவான் தான் காலத்தை வென்றவர். காலைக் காட்சிக்குத் திரைப்படம் பார்க்கச் செல் லும் குதூகலத்தில் அவர் அப்படிச் சொல்லி விட்டார்! - - - - - - - - - - வாழ்ந்து கெட்டவர்களைக் கண்டால், பாவம்: போதாத காலம்' என்பார்கள். தாழ்ந்து உயர்ந்: தவர்களைத் தரிசித்தால், பேஷ், உமக்கு யோக