பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

. .

காலம்' என்பார்கள். ஆக, காலம் இவ்விரு துருவ நிலைகளுக்குமே சாட்சியங்களாகின்றன. ஹரிச்சந்திரன், நளன், பஞ்பாண்டவர்கள், இராம பிரான் முதலான பிரமுகர்கள் காலத்தின் கோலத் துக்குப் புள்ளிகள்! . காலத்தை ஆளுபவன் காலதேவன். அதனல் தான், அவனுக்கு அப்படிப் பெயர் வந்தது போலும் ஆனல் காலத்தை ஆட்படுத்துபவர்கள் சோதிடர்கள், அப்பால், பஞ்சாங்கங்களும் காலண் டர்களும் ராகுகாலம், எமகண்டம், குளிகை என்று காலத்தைப் பாகு படுத்தி ஒதுக்குகிருர்கள். ஆனல், சுபவேளேக்கு மட்டும் சோதிடர்கள் ஆரத்தி எடுக்கத் தவறமாட்டார்கள். மங்கலநல்லோரை களில்தான் திருமணம் முதலிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனல், காலத்தை மதிக்காமல் சுபநேரங்கடந்து நடைபெறும் நல்ல நிகழ்ச்சிகளுக் கும் அவ்வப்போது குறைவில்லைதான். பெரிய மனிதர்களைக் காணவேண்டுமென்ருல், அதற்கான நேரம் காலம் வேண்டும். எதற்கும் நேரம், காலம், வேளை வரவேண்டும் என்று எங்கள். பாட்டி அறம்வளர்த்தாள் ஆச்சி அடிக்கடி சொல் வது இதற்காகத்தானே, என்னவோ? அரசியல் பிரமுகர்களைப் பேட்டி காண பேட்டி நேரம் என்ற ஒன்று உண்டு. உலகப் பெருந்தலைவர் நேருஜி, அகில உலகப் பெருந் தெய்வம் காந்திஜி ஆகிய இருவரும் இத்தகைய பேட்டி நேரங்களை ஒதுக்கிவிட்ட நிகழ்ச்சிகள் பல உண்டு.