பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


'இன்று போய், நாளை நின் தானையோடு மீண் டும் வருதி!' என்று இலங்கேஸ்வரனிடம் ஆணை பிறப்பித்தான் அஞ்சனவண்ணன். கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் வரும்! என்றிருந் தார்கள் பஞ்சபாண்டவர்கள். அடிமைத்தளை அகல தவம் இருந்தவள் பாரதத்தாய். காலம் இடைவெளி பரப்பிச் சோதிக்கும் கட் டங்கள் இப்படிப் பல இருக்கின்றன. காலம் ஒன்று. - -. ஆல்ை கால நிலைகள் தேசத்துக்குத் தேசம் மாறுபடும். க்ரீன்விச் மெர்டியம் மேலைநாட்டுக்கு ஒரு காலவரம்பு 'இண்டியன் ஸ்டாண்டர்ட் டைம்’ என்பது நமக்குப் பழக்கமான காலவிளிம்பு. ஆனல் பட்டிக்காட்டில் தன் நிழலைத் தன் காலால் அளந்து, காலத்தை அளந்து விடுவார்கள். நேரம் பொன்னனது. ஆனல் தேர்தல்கால மேடைப்பேச்சுக்கள் வேட்பாளர்களுக்குப் பொன் ஞனது. பொதுமக்களுக்கும் அப்படித்தான் என் பதை அவர்கள் மறந்து விட்டு, பேசிக் கொண்டே யிருப்பார்கள். அந்தப் பேச்சுக்கு வெற்றி கிட்டி, சட்டமன்றம் அழைத்தால், அவர்களின் பேச்சுக்கு எல்லைகட்டி, அழைக்கும் மணியை இயக்கி, அமர வைத்து விடும் தர்மத்தை அவர்கள் மறந்து விடுகிரு.ர்கள். வேலை நேரம் என்பது சட்டத்தின் விதி. இப்போது கோயில் தெய்வங்களுக்கும் வேலை நேரம் ஏற்பட்டது. இவ்வுண்மையை தம்புச்