பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 செட்டித் தெரு மறைக்க முடியாது. ஒருவேளை மார்கழித் திங்கள். இம்முறை தளர்த்தப்பட்டி ருக்கலாம்! நாளேக்குக் கிடைக்கும் பலாப்பழ்த்தைக் காட் டிலும் இன்று கிடைக்கும் களாப்பழமே சிறந்தது! -இது பழமொழி. இதில் காலத்தின் அருமையும் புனிதமும் இழைபாய்ந்திருக்கின்றன. இன்றே. செய்!” என்பதன் பாவனையும் இதிலிருந்து உதயம் தான். காலமும் அலையும் யாருக்காகவும் காத்திருக் காது!’-ஆம்! - - குழந்தைகள் பிறந்தால், தகப்பன்காரன் உடனே கடிகாரத்தைத்தான் பார்ப்பான். பெரிய அலுவலகங்களிலே டைம்கீப்பர்’ என் ருெருவர் இருப்பார். ஆனால், பூரீமான் எமதர்ம ராஜன்தான் ஒரிஜினல் டைம் கீப்பர்!" காலம் அறிந்து உண்ணவேண்டும்; இது வைத் திய சாஸ்திரம். காலம் ஒரு டாக்டர். மனத் துன்பங்களே ஆற்றும் தர்மப்பிரபு அவன், "மக்கள் மதிப்பிடுவன வெல்லாம் வெகுவேக மாக மாறுதல்கள் அடைந்துவிடக் கூடிய காலத் தில்தான் நாம் வாழ்கிருேம். காலம்தான் சரியான சோதனைக் கருவியாகும். அதுதான், நான் செய்தது சரியா, இல்லையா என்பதைக் கடைசியில் முடிவு செய்யும்!’ என்பது காந்தி வாக்கு ஆகும். தீரர் ஹிட்லர் உல்க யுத்தத்திலே மாபெரும் வெற்றிகள் அடைந்து கொண்டிருந்த நேரம் அது.