பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நீங்கள் பார்த்திருப்பீர்கள்-பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் சுமந்து வருவார்கள். ஆனல், ஆண்களோ தண்ணிர்க் குடங்களைத் தாங்கி வரும் ‘தலையெழுத்து’ ஏற்படுங்கால், அப்பொழுது அவர்களுக்கு கை கொடுத்து உதவுவது இந்தத் தோள்களேதாம்! ‘அப்பப்பா! தோள்பட்டை கழன்றுவிட்டதே!’ என்ற அபய ஓலம் அவர்கள் வீடு வந்ததும் தன்னாலே தேய்ந்துவிடும் ‘சிதம்பர ரகசியம்’ அந்தத் தோளுக்கு மாத்திரம்தான் அர்ப்பணம். ஆண்களைப் பொறுத்தமட்டில், அவர்களது வலது தோள் துடித்தால்தான் அதிருஷ்டமாம்!... இடது தோள்கள் ‘இஞ்செக்க்ஷன்’களுக்குச் சமர்ப்பணமாக இருக்கட்டுமே! குடும்ப பாரத்திற்குச் ‘சுமைதாங்கி’யும் இந்தத் தோள்களேதானாம்!— யார் இட்ட சாபமோ?

ஸ்ரீமந் ராமபிரானை நாமெல்லோரும் கண் குளிரக் கண்டு களித்திருக்கிறோம்—படங்களிலே? தோளிலே அம்பராத் துாணியும், கையில் வில்லுமாகக் காட்சியளிக்கும் அழகுக்கு ஈடேது, இணை ஏது? அவரது தோள்கள் இலக்கியப் பிரசித்தி பெறுமளவுக்குப் பலமும், அழகும் பெற்றிருந்தனவாம்! ‘தோள் கண்டார், தோளே கண்டார்!’ என்ற தேன் சொட்டும் கவிதை வரிகளை யார்தாம் ரசிக்காமல் இருக்க முடியும்? அவரது ‘விற்பெருந் தடத் தோள்’ போற்றப்படாத நா என்ன நா?

‘மணிமலைப் பணத்தோள்’ என்றும்,‘வானகத் தோள்’ என்றும், ‘வீங்கிரு தோள் வீரன்’ என்றும்,