பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22



உலகம் நிறைந்த பூமி தேவியையும் நாம் கையெடுத்துக் கும்பிடுகிறோம். புத்துடை திகழ விளங்கும் நாம் புது மனமும் புது மணமும் பெற்று விளங்குகிறோம்.

“வாழ்த்துகிறோம் உன் கருணை;
வளர்ந்து யரும் எம் வாழ்வு;
வாழ்த்திடு நீ எங்களையும்
வாழிய நீ பல்லூழி!”

என் பாடல் வரிகளை மீண்டும் நான் எண்ணிப் புளகிதம் எய்துகிறேன்.

மஞ்சக் கதிர்க் கொத்து, மாண்புறு புத்தரிசி, மணத்திடும் புத்துருக்கு, சுவை பரப்பும் தேங்காய் ஆகியவற்றுடன் இனிப்புக் கணிச்சுவை பரப்பும் கரும்பின் கதையையும் நாம் நினைவு கூர்கின்றோம்.

கரும்பு என்றதும், அது வாழ்வின் தொடக்க மாகவும், அதுவே வாழ்வுக்கு முடிவுமாகவும் அதை தாம் மதிப்பிடவும் தயங்குவதில்லை.

குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலில் போட்டு தெய்வ சந்நிதியில் வேண்டுதலை செலுத்துவார்கள் தாய்மார்கள். குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தையை அவ்வாறே கரும்புத் தொட்டிலிட்டுப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்து கொள்வார்கள்.

இது வாழ்வின் ஆரம்பம்.