பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

முருகன்:

மஞ்சி விரட்டுப் பந்தயந்தான்--என்னைத்
தஞ்சம் வைச்சுது உன்னிடமே!
கஞ்சிக் கலயப் பந்தமுந்தான் நம்மைப்
பஞ்சுந்தணலாய் ஆக்கிடுச்சு!


வள்ளி :

கேலிப்பேச்சை நிறுத்திடுங்க-உயிர்
வேலி நம்மைக் காத்திடுமே!
தாலி தந்த நேசமச்சானே-வந்து
காலி பண்ணுங்க பொங்கலையே!

கரும்பு தின்னக் கூலி யாருமே கேட்பதில்லை. அதற்காகக் கரும்பைத் தூருடன் பிடுங்கி யாரும் தின்றுவிடக் கூடாது. கணுச் சிதைத்து. அடி வெட்டித் துண்டு போட்டு, அடியிலிருந்து தின்ன வேண்டும். நுனி அழகாக இருக்கிறதென்று தின்று ஏமாந்த ஜயபாலனின் கதையை யார்தாம் மறப்பார்கள்?

அது கிடக்கட்டும்.

அபிஷேக பாண்டியன் தன்னைக் காணவந்த சித்தரைச் சோதிக்க, அவரிடம் ஒரு கரும்பினை ஈந்து அதைக் கல் யானை தின்னும்படி செய்யச் சொன்னான். அவ்வாறே அந்தக் கல் யானை, மனத்தையும் கல்லாக்கிவிடாமல், அம்மாதிரியே-சித்தரின் விருப்பப்படியே கரும்பைத் தின்றது. பாண்டியன் வியந்தான். சித்தனாக வந்தது சொக்கேசப்