பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


ஆரிரரோ!' என்னும் தாலாட்டுப் பாட்டின் இனிய நாதத்திலேயே தொட்டிலில் கண் வளர்ந்த குழந்தைப் பிராயம் அப்படியே சிரஞ்சீவித் தன்மை பெற்றிருக்கலாகாதா என எண்ணி ஏங்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கண்களைக் கசக்கியவாறு விழி திறந்தால், விடியாத பொழுதுதான் என்னைப் பயமுறுத்தும். ஒருவேளை 'அனசூயை காலம்' திரும்பி விட்டதோவென்று நான் ஐயப்பட்டு மண்டையைப் போட்டு உருட்டிக் கொள்வதற்குள், 'கொக்கரக்கோ', குரல் பண்பரப்பத் தொடங்கி விடும். அப்பா பிழைப்பார்; நான் படுப்பேன். அதாவது, பள்ளிகூடத்திலே முறை வைத்து 'கோரஸ், பாடிய 'ப...ட...ம்= படம்' என்ற பாடத்தை என் நினைவில்லாமலேயே என் உதடுகள் உச்சரிக்கும்; பிள்ளை கருத்துடன் படிப்பதாகயும் எண்ணி புளகிதமடைந்த நிறைவிலேயே மறுபடி இரண்டாவது சில்லறைத் தூக்கத்தில் ஹாயாக ஆழ்ந்த விடுவார் என் தகப்பனார். நான் வெளியேற்றிக் கொண்டிருக்கும் கொட்டாவிகளை விரல் விட்டு எண்ணி அலுத்துப் போகும் என் தாயோ என் பேரில் இரக்கம் கொண்டு கருணை காட்டி என்னைக் கண் வளரச் செய்து விடுவாள். ஆம்; நான் நவீன கும்பகர்ணனாக இயங்கியும்—இயக்கப்பட்டும் வரலானேன். இந்நிலையில் வைகறையின் திவ்ய தரிசனம் எனக்கு எப்படிக்கிட்டியிருக்க முடியும்?

எங்கள் வீட்டுச் சுவர்க் கடிகாரம் காலமெனும் செப்பிடு வித்தைக்காரனோடு ஒத்துப்போக மறுத்து,