பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


ஒத்துழையாமை இயக்கத்தில் குதித்தாலும், நான் என்னவோ இரண்டாம் வகுப்பில் குதிக்கும்படி ஆனது. புத்தர்பிரானுக்கு ஞானம் பிறக்க ஒரு போதி மரம் கிடைத்தாற்போல, எனக்கு ஓர் அத்தி மரம் கிடைத்தது. அந்த அத்திமர நிழலில் தான் "வைகறைத் துயிலெழு!" என்னும் பாட்டுக்கு அத்தி பூத்த பாவனையில் பொருள் சொல்லி வைத்தார் எழுத்தறிவித்த இறைவன்.

'ஆஹா! இவ்வளவு நாட்களாக எத்தகைய மகத்தான தப்பைச் செய்து விட்டோம்? விடிகாலையில் படுக்கையை உதறி வீசியெறிந்துவிட வேண்டுமென்று ஔவைப் பாட்டி பாட்டு வேறு பாடி வைத்திருப்பது மறந்தே போய் விட்டதே? சரி, சரி! நடந்தவரை நாராயணன் செயல்; இனிமேல் கன கச்சிதமாக, பொழுது விடிவதற்கு முன்னமேயே எழுந்துவிட வேண்டும்' என்று சங்கற்பம் செய்து கொண்டு, அன்றிரவு படுக்கையை விரித்தேன். இத்தனை நாட்களாக தவறாமல் நான் செய்து வந்த தவற்றை விளக்கி அம்மாவிடம் மன்னிப்புக்கோரி, வைகறையிலேயே என்னை எழுப்பிவிடுமாறும் வேண்டிக் கொண்டேன். 'தம்பிக்கு இப்ப வாச்சும் நல்ல புத்தி திரும்பிச்சே!' என்கின்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடியபடி, 'அப்படியே வரம் தந்தோம், அருமைப் பிள்ளாய்!' என்று அபயம் தந்து சென்றதை மறக்காத அம்மா என்னை வந்து விடிகாலையில் எழுப்பினாள். அவ்வளவுதான்; தூக்கம் கலைக்கப்பட்ட பழைய கும்பகருணனைக்