பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


கிலியாக மாறி, ஔவை மூதாட்டியின் '144' கட்டளையை வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சேர்த்துக் காட்டிற்று. 'தம்பி, விடிகாலையிலே எழுந்து பாடம் படித்தால்தான் படிப்பு மூளையிலே நன்றாகப் பதியும்!' என்று அப்பா தலையிலடித்துச் சொன்ன காட்சியையும் அப்போது என்னால் நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அப்பாவின் கண்டிப்புக்கு அணை கட்ட அம்மாவைத் தூதனுப்பி, விடிகாலைப் படிப்புக்கு முழுக்குப் போட்டேன்! மந்திர சக்தி பெற்ற இந்தத் தூக்கத்தைக் கண்டு பிடித்தவனை வாழ்த்திப் போற்றக்கூடிய நிலையிலா நான் இருந்தேன்?

ஹாஸ்டல் வாழ்க்கையில் அப்பா—அம்மாவின் கடமையை, அல்லது, அலுவலை ஏற்க அங்கே ஓர் அலாரம் கடிகாரம் எனக்கெனத் தவம் கிடந்திருக்க வேண்டும்! இல்லையென்றால், பெற்றவர்களின் அதிகாரம் பெற்ற ஏஜண்டு போல என்னை அல்லும் பகலும் ஆட்டிப் படைத்திருக்குமா? இத்தனை மணி, இத்தனை நிமிஷத்துக்கு என்னை நீ எழுப்பியாக வேண்டும்!' என்று அதனிடம் சொல்லி விட்டால் போதும்; பூபாளத்துக்கு அல்லது கோழியின் கொக்கரக்கோ சத்தத்துக்கு வேலை இருக்காது. நான் சொன்னேன்; அது அவ்வாறே எழுப்பியது என்பதை, பறிபோன என் பொறுமையல்லவா சிந்தித்திருக்க வேண்டும்? உடனே எனக்குப் பொல்லாக் கோபம் வந்து கை கட்டி நிற்கும். அலாரத்தின் மண்டையில் ஓங்கி அடித்து விட்டு, மீண்டும் கண்களை மூடி