பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


டாவது சாபக்கேடு இந்தத் துக்கம்' என்ற சிதம்பர ரகசியத்தை நான் அறிந்ததுண்டு. ஆகையில்ைதான் நான் உறக்கத்தை மாத்திரம் கைவிடவில்லை! துள்ளித் திரிந்த காலத்தே குறுக்கிட்ட பள்ளி நாட்கள் அறிவித்த புள்ளி விவரங்களின் பலாபலனை நான் நினைவிற்கொண்டு, பரீட்சை முடிவை ஏந்தி வந்த நாளிதழைப் பார்த்தேன். அதே தருணத்தில் தான், வைகறைத் துயிலெழாமல் போன குற்றத் தையும் அடியேல்ை உணர முடிந்தது! அமிர்தம் வந்தாள்; பின் துரங்கி முன் எழும் பூவையாகவே வந்தாள். எங்கே இவளும் அப்பாஅம்மா மாதிரியோ, அன்றி அலாரம் போலவோ என் உறக்கத்தின் பிடரியில் கையை வைத்து விடு வாளோ என்று அஞ்சி, வருமுன் காக்கும் உணர் வோடு, எனக்கும் உறககத்துக்கும் உள்ள நட்பை சாங்கோபாங்கமாக மேடைப் பேச்சுப் பாணியில் விளக்கினேன். என்ருலும், இவ்விடத்தில் ஒர் உண் மையினையும் கூறிவிடுவது என் கடமையாகும். ஒளவையின் பாட்டை அவள் பின்பற்றலாகா தென்று மட்டும் அவளை நான் கேட்டுக் கொள்ள வில்லை. பாரதியார் சொல்கிருர், பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்!” என்று. இதைப் படிக் கும்போதெல்லாம் எனக்கு விலா வெடிக்கும் சிரிப்புத்தான் புறப்படுகின்றது. ஏன் தெரியுமா?