பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


அந்த யாம்' என்ற சொல்லில் அடியேன் மாத்திரம் விதிவிலக்கு. 'வைகறைத் துயிலெழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் நித்தமும் உடம்பைப் படுக்கையில் சாய்க்கிறேன். ஆனல் என்னவோ, அவ்வாறு செய்ய இயலவில்லையே?’ என்று அமிர்தத்திடம் குறைப்பட்டுக் கொண்டதுதான் மிச்சம். தினமும் வெயிலின் கண்ணில்தான் நான் கண் திறந்தேன். இதன் விளைவுகளாக எனக்கு ஏற்பட்ட தொல்லைகளும் நஷ்டங்களும் அனந்தம். எனக்காகக் காத்துத் தவங்கிடந்து கடைசியில் ஆறித் தண்ணிராக மாறிய அந்த 'பெட் காப்பி'களுக்கு என் மீதிருக்கும் கோபத்தை என்னல் எப்படிப் போக்க முடியுமோ, தெரியவில்லை! ஒரு நாள் : வழக்கம் போல நேரம் சென்றுதான் எழுந்தேன். எழுந்தபோதே பசி வயிற்றைக் கிள்ளியது. காலைப் பலகாரம் கொணரும்படி பணித்தேன், கொண்டவளிடம். அவள் வெறுங்கையுடன் வந்தாள். உடன் வந்த அருமைக் குழந்தை, பிரித்திருந்த புத்தகம் ஒன்றை என்னிடம் நீட்டி, ஓரிடத்தைக் காட்டியது. 'உறங்கின நரிக்கு உணவு கிட்டாது' என்ற பழமொழி அது. 'குழந்தை எல்லா இட்டிலியையும் சாப்பிட்டு விட்டான். விடிகாலையிலேயே விழித்துக்கொண்டு,