பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

ஓர் அழைப்பிதழ். அதன் முகப்பில் முகூர்த்த நாள் சொல்லப்பட்டிருந்தது. மணமகன், மணமகள் பெயர்களும் கண்டிருந்தன. திருமண தினத்தை மன டைரியில் குறித்துக் கொண்டபின், குறிப்பிட்ட அந்த நாளுக்காகக் காத்துக் கிடந்த வேளை பார்த்து, அயலூர்ப் பயணம் ஒன்று திடீரென்று வரவே, நான் புறப்பட வேண்டியவன் ஆனேன். பையும் கையுமாக நின்ற நேரத்தில், மணமகனே பிரசன்னமானார். ‘வாருங்கள், ஐயா!’ என்றார். மணமகன் தங்கக் கம்பி. இம்மாதிரி சந்தர்ப்பங்களிலே அவருக்கு மணவறையில் உட்கார்ந்திருக்கவே பொழுது காணமாட்டாது. ஆனல் இந்த இளைஞரோ, என்னேக் கவுரவப்படுத்த வேண்டி, நேரிலேயே அழைக்க வந்திருந்தார். என்னுடைய திடீர்ப்பயணம் பற்றி அவரிடம் ஆதியோ டந்தமாய்ச் சொன்னேன். அவர் என்னே நோக்கி நகைபூத்தார். பிறகு என்னுடைய மேன்மை கொண்ட திட்டத்திற்கு ஆதாரம் காட்டி, அதற்குச் சாதகமான வாசகங்களை அவர் செவிகளில் கொட்டினேன். அவரோ தேள் கொட்டிய பாவனையில் தத்தளித்தாரே யொழிய, என் மொழிகளைச் செவி மடுத்தாரில்லை. எனக்கு அனுப்பிய திருமண அழைப்பைத் திரும்பக் கேட்டார். ‘சரி; நாம் கல்யாணத்திற்கு வராததால், நமக்குத் தந்த அழைப்பை இன்னொருவருக்குக் கொடுக்கலாம் என்ற சிக்கன நோக்கம் கொண்டிருக்கிறார்’ என்று மனத்தை ஆறுதல்படுத்திக்கொண்டு அந்த அழைப்பை அவரிடம் சமர்ப்பித்தேன். நான் நினைத்-