பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


திருமண அழைப்புக்களை அனுப்புவது சில வரம்புகளுக்கு உட்பட்டது. வேண்டப்பட்டவர்களுக்கு அசந்து மறந்து அழைப்பு அனுப்ப மறந்து விட்டால், அதனால் ஏற்படும் விளைபலன்களை மட்டும் சோதித்துப் பார்க்க ஆசைப்படாதீர்கள்! நெருங்கிய சொந்தக்காரர்கள் என்ருல், அவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் அழைப்பைக் கொடுக்கவேண்டும். கல்யாண தினத்தன்று வாசல் முகப்பில் நின்று “வாருங்கள்!” என்று முகமன் கூறி, விருந்து வைக்கவேண்டும். அப்புறம் அவர்கள் மொய் எழுதினால், வாங்கினாலும் வாங்கலாம்; மறுத்தாலும் மறுக்கலாம். பரிசுப் பொருள்களுக்கும் இதே கதைதான். இதைப்பற்றிய தீர்ப்பைக் கூட அழைப்பில் குறித்து விடுகிறார்கள். அவ்வாறே தபால் தந்தி முகவரிகளையும் ஜாடை காட்டிவிடுவதும் இயல்பு. விருந்திற்கு உக்கிராண அறை போன்று, திருமண அழைப்புக்கு ஈடாக விநியோகிக்கப்படும் திருமண வாழ்த்துப்பத்திரங்களை 'மைக்’ கின் முன்னிலையில் வாசிப்பதற்கென தனியே ஒர் இலாகாவே பணி செய்யும்.

திருமண அழைப்புக்கள் காரணமாக இன்னொரு சங்கடமும் இல்லாமல் இல்லை. நம்முடைய மேலான நல்வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு டஜன் பேர்வழிகள் தங்கள் ஊர் மதிப்பைப்பெற எண்னியோ, அன்றி, தங்களது தலைவலியைப் பகிர்ந்தளிக்கவேண்டியோ ஏற்பாடு செய்த வாய்ப்பாட்டு, சதிர், நாகசுரம் இத்யாதி நிகழ்ச்சிளுக்கான நிரலையும் அழைப்பில் அச்சடித்து, இவற்றிற்கெல்லாம்