பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

காக்கை, சிட்டுக் குருவி, தூக்கனாங்குருவி என்று எல்லாவற்றுக்கும் “சான்ஸ்” கொடுத்து வருகிறார்கள். காதல் ஜோடி “டூயட்” பாடத்தொடங்கினால் தோட்டத்து மரத்தில் குயில் ஜோடிகள் ஒன்றைக்காட்டி அதை “கிக்கீ” என்று கத்த-அல்லது பாடச் செய்வார்கள். இந்தக் குயில் காதல் ஜோடியால், டைரக்டருக்கு “அப்ளாஸ்” கிடைத்துவிடும்!

காக்கை கறுப்பு என்றால் என்ன? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்!

எருது, நோய்ப்பட்டிருந்தால், அதன் மேனியில் சமய சந்தர்ப்பம் பார்த்து உட்காரப் பழகிக்கொள்ளும் இங்கிதத்தை இனியாவது இந்தக் காகங்கள் பழகிக்கொள்ளுவது நல்லது!

மிதிலைச் செல்வியை இலங்கையர் கோன்துக்கிச் சென்ற செய்தியை ராஜாளி என்னும் பறவை சொல்வதை நாம் சினிமாவில் காது கொடுத்துக்கேட்டதுண்டு.ஆனால் காக்கைபாடினியார் என்ற பெண்பால் புலவருக்கு இப்படிப்பட்ட பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் சொல்லியனுப்புங்களேன்!

தூக்கணங்குருவி தன் கையுழைப்பினாலேயே தனக்கு வேண்டிய கூடு, விளக்கு இரை ஆகியவற்றைத் தேடிக்கொள்ளும். சிட்டுக் குருவி ஜோடி இணைபிரியாத் தன்மைக்கு ஓர் உதாரணம். உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆக