பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

 மொழி பெண் இனம் அளவு மீறிச் சிரிப்பில் ஈடு பாடில்லாதிருக்க எழுந்த எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே? (அடடே, அமிர்தம், உன்னைச்சொல்ல வில்லை. நீ அளவுக்கு மிஞ்சும்போதுதானே அமிர்தமாகிறாய்!) அதே சமயம், முன்பு பளிங்கு மண்டபத்திலே பொங்கி வழிந்த சிரிப்பை திரெளபதை அடக்கச் சக்தியற்றுப்போக அதன் காரணமாக, துரியோதனன் கோபங்கொண்டு பிறகு பாரதயுத்தமே பிறந்ததாகக் 'கதை' சொல்லப்படுவதைக் கேட்கும்போது, சிரிப்பு விஷயத்தில் ஒரு 'கண்' ஜாடையாக வைக்கத் தோன்றுவது சகஜம்தான்...!

ஊழித் தாண்டவத்தில் பிரமன் உதிர்த்த பேய்ச் சிரிப்புக்கு ஒப்பு உவமை இல்லையாமே! இது கூடக் கதைதானோ...!

காரிய சித்திக்குக் கைகண்ட ஆயுதம் இந்தச் சிரிப்பு. பொங்கலுக்குச் சட்டை தைத்தாக வேண்டுமானால், டெய்லர் மாபூப் சாகிப்பிடம் செய்தியைச் சொல்லி, அத்துடன் நியாய விலை ரேஷன்' ரீதியில் அளந்து முறுவல் கீற்றொன்றைச் சிந்தினால், உடனே காரியம் கைமேல் பலன். ஆபீஸ் செல்லக் கொஞ்சம் நாழி ஆகிவிட்டால், மானேஜரிடம் நீங்கள் புன்னகை மலரை உங்கள் உதட்டோரத்திலும் கண்ணோரத்திலும் தூவிவிட்டு, பிறகு பெண்டிங்கில் வைத்திருக்கும் நொண்டிப் புளுகையும் ஒருமுறை ஒப்புவித்துவிட்டால் போதுமே...! சிரிப்பு உங்களை ஆபீஸ் நாற்காலியில்