பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母兽 13 அளவும், எரியச் சத்து 524 அளவும் (எல்லாம் 100-க்குத்தான்) உள்ளன. இது விஞ்ஞான விந்தை. முட்டைகளே 'அடை' காத்து குஞ்சுகள் பொரிக்கின்றன கோழிகள். இது சிருஷ்டியின் விசித்திரம்! கோழி மிதித்துக் குஞ்சு முடமாவதில்லை!" இது வாழ்வியல் பழமொழி. வைட்டமின் வகைகள் கொண்ட உணவுப் பண்டங்களைப் படைத்து, இந்தக் கோழிகளை விருந் துக்கு அழைத்துப் பாருங்கள். அவற்றின் நாட்ட மெல்லாம் குப்பை மேடுகளில்தான் இருக்கும். அது தான் அவற்றின் தலைச் சுழி! . சென்னையில் ஒரு கோழி புராண மகிமை’ பெற்று ஏதேதோ செப்பிடுவித்தை செய்து மகத்து வம்பெற்ற விவரங்களே முன்பு நாம் பத்திரிகைகளில் பார்த்திருந்தோம்! இந்தக் கோழி கோயில் ஒன்றிற்கு நேர்ந்து விடப்பட்டதாம்: இந்தோனேஷியாவிலோ அல்லது ஜப்பா னிலோ இந்தக் கோழிகள் தேசீயப் பறவைகளாக மதிக்கப்படுவதாக நான் படித்திருக்கிறேன். கோழிகளும், கோழி முட்டைகளும் அண்டிக் கொண்டிருக்கும் தேர்தலுக்கு உரிய சின்னங்களாக