பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

பூலோகத்திலேயே நடத்தி விடுகிறார்களோ? சொர்க்கத்தின் “ஏ கிளாஸ்” நபர்களின் மானசீகமான ஆசியுடன்தான் இங்கே கல்யாணங்கள் செய்யப்பட வேண்டும்! ஒரு வதுவை விழாவை நடத்துவதற்கு ஆயிரம் பொய் சொல்லலாமென்று லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள், பெரியவர்கள் அதற்காக, தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றிஒன்பது பொய்களைச் சொல்லிவிட்டு, கேவலம் ஒரு பொய் கிடைக்கவில்லையே என்று தாபப்பட்டுக்கொண்டு, கல்யாணத்தைச்செய்து வைக்கும் தர்மகாரியத்தை ‘டிலே’ செய்யவேண்டிய தர்மசங்கடத்தை யாரும் மேற்கொள்ள வேண்டியதில்லையல்லவா?

பட்டணத்து வீதிகளிலே அங்கங்கே ஓர் எச்சரிக்கைப்பலகை நின்று கொண்டிருக்கும். ‘நில், கவனி, போ!’ என்ற மூன்று தாரகமந்திரங்கள் நம்மை மூச்சுத்திணறவடித்துவிடும். அப்பலகையின் வேண்டுதல் பிரகாரம் நாம் நின்று கவனித்தால், அங்கு எதுவும் இருக்காது. “சரி, போகலாம்” என்று நடையைக்கட்டினால், அருகில் செல்லும் பட்டிக்காட்டான் ஒருவன் ஒரு பள்ளத்தில் விழுந்து திண்டாடும் தர்மசங்கடமான கண் கொள்ளாக்காட்சியை நாம் காண்போம். உடனே நாமும் சுதாரித்துக்கொண்டு, பள்ளங்களைத்தேடியபடியே நடையைத்தொடர்ந்து செல்வோம்!

முச்சந்தி, நாற்சந்திகளிலே போக்குவரத்துக் காவலர் குடை நிழல் இருந்து கைகளை அபிநயம் காட்டி, போக்குவரத்துக்களை சமன் செய்து