பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

தன்னுடைய ராஜ்ய பாரத்தைச் செம்மையுடன் நடத்துவார்; சிவப்பு பச்சை விளக்குகளும் இப்பணியினை மின் இயக்கத்தின் மூலம் நடத்துவதும் உண்டு. எல்லாம் இருந்தும், தினம் தினம் அமர்க்களமாக நடந்தேறும் விபத்துக்களுக்குக் கணக்கு உண்டா, வழக்கு உண்டா? மேற்படி விபத்துக்களின் கணக்கைச் சொல்லி, வழக்கை உண்டாக்க வழிவகுத்துக் கொடுக்கும் தாள்களுக்கு ‘இடம் பூர்த்தி’ என்ற மகிழ்ச்சியும் நமக்கு இப்படிப்பட்ட தலைவலிச் செய்திகளாகப்படிக்க நேரிடுகிறதே என்ற தர்மத்தின் சங்கடமும் இருதுருவப்புள்ளிகளிலே உண்டாவதென்னவோ உண்மை தான்!

ரயிலில் பிரயாணம் செய்கிறோம். ஜங்ஷன்களிலே பிரயாணிகளின் சமதர்மமான சங்கடங்களை நிவர்த்தி செய்வதற்காகவே, அவரவர்களின் பர்ஸ்களுக்கு ஏற்ப, வசதிகள் உண்டாகிவிடுகின்றன. சக பிரயாணிகட்கு அசெளகர்யமாக புகை பிடித்தல் தவறு என்று நம் பணத்தைக்கொண்டு எழுதி வைக்கிறார்கள். ஆனால், சகபிரயாணிகள் என்னும் போது, ஒருவர் புகைப்பிரியராக இருந்து ஏனையவர் புகை வெறுப்பாளராக இருந்து விட்டால், முண்டு விடும் “கட்ச்” கலவரம்! சகட்டு மேனிக்கு, புகைபிடிப்பவர்கள் என்று ஒரு கும்பலைப் பிரித்து ஒரு பெட்டியில் போட்டு அடைத்துவிட்டால் மேலே விமானத்தில் பறந்து வேவு பார்க்கும் ஒரு சீனன், இங்கே நெளியும் புகை மண்டலத்தைக்கண்டு பயந்து அப்படியே ஹாங்ஹாங்குக்கு நழுவி விடக்