பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கூடுமே! புகை பிடிக்காதவர்கள் மேற்படி புகை எனும் தர்மசங்கடத்தினின்றும் விடுதலை பெறவும் பொன்னை வாய்ப்பும் கிட்டும்!... "வண்டியை நிறுத்திக் கைபிடியை இழு!" என்று எச்சரிக்கை விளம்பரமும் பெட்டிகளில் கண்சிமிட்டும். வண்டியை ஓடுவதினின்றும் நிறுத்தி வேடிக்கை பார்க்க விழையும் சீமான்கள், அல்லது சீமான் வீட்டுப்பிள்ளைகள் கையில் அபராதத்தொகையை வைத்துக்கொண்டு கைபிடியை இழுத்து விட்டால், ரயில்வேக்காரர்களுக்கு இதனால் எவ்விதமான தர்ம சங்கடமோ, சங்கட தர்மமோ இருக்க முடியாது என்பது மட்டும் உறுதி, உறுதி! லக்கேஜ்களுக்கு மட்டும் என்ற பலகைத்தட்டுக்களிலே மனிதர்கள் புளி மூட்டைகளாக அடைந்து விட்டால் பாவம், இந்த லக்கேஜ்களின் தர்மசங்கட நிலைக்கு யார் தான் அனுதாபம் தெரிவிப்பார்களோ?

சரி.

இப்போது, பஸ்களிலே செலவு செய்கிறோம். செலவு–சவாரி; சவாரி பிரயாணம்!.. ஒரு பக்கம் திரும்பினால், "தூங்காதே!" என்றிருக்கும். அதைப்பார்த்த சடுதியிலேயே நமக்குத் தாக்கம் வரும்! பெரிய மனிதர் கண்களில் அந்த அட்டை பட்டாலோ, அவருக்குத்தம்மை ஏகவசனத்தில் எச்சரித்திருக்கிருனேயென்று கோபம் வரும்! இலக்கண விதிகள் அங்கு யாரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவது கிடையவே கிடையாது. "சில்லறைக்காசுகளை கண்டக்டரிடம் கேட்டு வாங்கவும்" என்று