பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 க. சமுத்திரம் “ஒவ்வொருத்தர் வீட்டில் அக்காள வச்சிட்டுத் தங்கச்சிக்குக் கல்யாணம் நடக்குது. இந்த வீட்ல அத்தக்காரிக்காக, என் பொண்ணு மொட்ட மரமாக நிக்க வேண்டியதிருக்கு, ஒங்க தங்கைக்கு அவளோட தலவிதிப்படி கல்யாணம் நடக்கல. அந்த விதிய என் பொண்ணுமேலே சுமத்துனா எப்படி?” "இந்தா பாரு காமாட்சி. வீணய் மேல மேல பேசிக்கிட்டு போகாதே. சிவகாமி, மோகனாவைவிட வயசிலே பெரியவள். அவளுக்குக் கல்யாணம் பண்ணுமுன்னே மோகனாவுக்கு நடக்காது. அப்படி நடக்கிறதும் நாகரீகமல்ல." "என் மவளும் ஒங்க தங்கச்சியும் ஒண்ணு? கழுதயும் கவுரிமானும் ஒண்ணுயிடுமா? ஏற்கனவே அவளுக்கு வயசாயி கிழட்டு மாடு மாதிரி ஆயிட்டா. அவளுக்குக் கிழட்டு மாப்பிளகூடக் கிடைக்கமாட்டான். இதுக்காவ என் பொண்ண பலியிடணுமுன்னா முடியாது. நீங்க சம்மதிச்சாலும் சரி இல்லாட்டாலும் சரி, நான் நடத்தப்போறேன்.என் பொண்ணும் ஒங்கதங்கச்சி மாதிரி கிழவியா போறத என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.” காமாட்சி அழுகிறாளா அல்லது கணவனை அழவைக்கிறாளா என்று புரிந்துகொள்ள முடியாத அந்த நிலையில், இருட்டறைக்குள் இருந்த கிழவி தட்டுத் தடுமாறி வெளியே வந்து, தன் தலையில் பலங்கொண்ட மட்டும் அடித்துக் கொண்டாள். மகனிடம் முகம் பார்த்து கேட்டாள். கூடப் பிறந்த தங்கச்சிய நாயவிடக் கேவலமாப் பேகறாள். நீ பார்த்துக்கிட்டு இருக்கியே. இருக்கியே.?” மருமகள் காமாட்சியும், தனது தலையிலும் அடித்துக் கொண்டு, மாமியாரிடம் சொல்லால் மல்லாடினாள். "நீ என்னைக்கு இந்த வூட்லவெள்ளைச்சேலையோட காலடி வச்சியோ அன்னைக்கேஎன்புருஷன் எனக்கில்லாமப்போயிட்டாரு” மோகனாவும் சிவகாமியும் தத்தம் அம்மாக்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்கள். பகபதி, இவர்கள் சத்தம்