பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 க. சமுத்திரம் காமாட்சி காட்டு கத்தலாய்க் கத்தினாள். அண்டை வீட்டுக்காரிக்கு காது கிழியும்படி கத்தினாள். “யாரைக் கேட்டு ரிட்டையரர் ஆனிங்க? ஒங்களுக்குப் பைத்தியமா? உத்தியோகத்துலே இருந்தாதானே மோகனாவுக்கு ஏதாவது இடம் வரும்?கெடுத்துத் தொலைச்சிட்டீங்களே கெடுத்து.” "கவலப்படாத காமாட்சி! நம்ம ஆடிட்டர் ஜெயராமன் மகன் வக்கீல் கந்தரம் இருக்கானே அவனுக்கு மோகனாவ கொடுக்கிறதா செட்டில் பண்ணிட்டேன்.நம்ம வரதராஜன்தான், முடிவு பண்ணிக் கொடுத்தான்.” "ஒங்களுக்குப் பைத்தியமா. நீங்க பினாத்துர வரதராஜன் மகளுக்கும் கந்தரத்திற்கும் இன்னைக்கு நிச்சயதாம்பூலம்.” பசுபதி திகைத்தார். "என்னது மோகனாவுக்கு செட்டில் பண்றதாகச் சொல்லி என்கிட்ட ஆயிரம் ரூபாய் கடன் வாங்குன வரதராஜனா இப்படிப் பண்ணிட்டான்? அவனா எனக்குத் துரோகம் பண்ணிட்டான்?" காமாட்சி, மீண்டும் கத்தினாள். "நீங்க ஒரு சரியான பைத்தியம். இந்த ரூபாயை வச்சி ஒங்க தங்கச்சிக்குப் பிரசவ செலவு பார்க்கலாமுன்னு நினைக்காதீங்க. சரியா சீர்வரிசை பண்ணலியாம். பிரசவத்துக்கு வர முடியாதுன்னு ஒரு லெட்டர் எழுதியிருக்காள். நன்றி கெட்ட நாய்.” இதுவரை மெளனமாக இருந்த கிழவி, இப்போது தட்டுத் தடுமாறி வந்தாள். "ஏண்டியம்மா! எதுக்காக என் மவள கரிச்சுக் கொட்டுற? ஒன் மவளுக்குச் சீக்கிரமாக கல்யாணவமாவணுமுன்னு ஒன் புருஷன், நான் பெத்த மவள அவசர அவசரமா பாழும் கிணத்துல தள்ளிட்டான்.”