பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 க. சமுத்திரம் அருணாசலம், வெற்றிப் பெருமிதத்துடன் டெலிபோனை வைத்துவிட்டு, பலவேசத்தைப் பார்த்தார். "லிங்கப்பா வர்லப்பா" என்றார் - எதுகை மோனையோடு. பலவேசம், நன்றி என்று சொல்ல முயன்று, அந்த வார்த்தை வெளிப்படும் முன்பே, வெளியே போனார். எங்கிருந்தோ வந்த டெலிபோனுக்கு, அவர் தனது அறையில் இருந்து பதில் சொல்வது அருணாசலத்திற்குக் கேட்டது. இங்கிருந்தபடியே குரலிட்டார். "யாரோட டெலிபோன்.” "மாத்திரை சாப்பிட்டாச்சா. தலைவரே." அருணாசலம், கேட்டதை மறந்து, மாத்திரையை எடுத்தார். அதை வாயில் போட்டு, கண்ணாடி தம்ளர் தண்ணிரை, கழுத்துக் குழாய் மூலம் உட்செலுத்தி விட்டு, வேலையில் கவனமானார். "இந்திரா. பர்டிகுலர்ஸ் எடுத்துட்டியா..? என்ன வேலை ஆயிட்டு இருக்குதா.?பர்ட்டிகுலர்ஸ் எடுக்க வேண்டிய சமயத்துல டைப்ரைட்டர் சப்தம் ஏன் கேட்குது? ஒ.கோ. அப்படி அப்படியே. டைப் அடிக்கிறியா? குட். அப்புறம் நான் சொன்னதைப் பெரிசா எடுத்துக்கிட்டு ஓவர் டைம் போடாமல் இருந்துடாதே. என் பிரின்ஸ்பிள் என்னென்னா, நல்லா நாள் பூராவும் விகவாசமாக வேலை பார்க்கணும். அதேசமயம், நிர்வாகம் தருகிற எல்லா சலுகைகளையும் பயன்படுத்திக்கணும்.” பேசிக்கொண்டே இருந்த அருணாசலம், பியூன் வெள்ளைச்சாமி, நீட்டிய ஒரு டெலக்ஸ் மெஸேஜை ஆங்கிலத்தில் படித்து, தமிழில் உள் வாங்கினார். அவர் பெயருக்கு வந்த டெலக்ஸ். அதன் தமிழாக்கம் இதுதான். "சிறிது நேரத்திற்கு முன்பு, பலவேசத்திடம் டெலிபோனில் சொன்னதுபோல், நமது மானேஜிங் டைரக்டர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து டில்லி புறப்படுகிறார்.