பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபத்தங்கள் மானேஜரின், ஏர் கண்டிஷன் அறைக்குள் நின்று கொண்டிருந்த சுமதிக்கு, வியர்த்துக் கொட்டியது. அங்கிருந்து வேகமாக வேளியேறி, தன் இருப்பிடத்தில் வந்து அமர்ந்தாள். ஏவுகணை மாதிரி வேகமாக வந்து, குண்டு மாதிரி தொப்பென்று' இருக்கையில் அவள் விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, பைலுக்குள் இருந்த தலையை எடுத்த தலைமைக் குமாஸ்தாவே, சிறிது அதிர்ந்து போனார். உள்ளங்கை கீழே விழுந்துவிட்டதா என்பதை ஊர்ஜிதப் படுத்துவதுபோல், சுமதி, தன் வலதுகையை உதறிக் கொண்டாள். கமதி, அருகிலிருந்துவசந்தியின் தோளைத்தட்டிக்கொண்டே, "வாரீங்களா அக்கா. கேன்டின் வரைக்கும் போயிட்டு வரலாம்." என்றாள். "ஆபீஸ் டயம்ல கேன்டின் போகலாமா? நீ வந்து இரண்டு மாதத்துக்குள்ள வேலையை மட்டுந்தான் கத்துக்கிட்டன்னு நினைச்சேன். இதையும் கத்தாச்சா?” சுமதி, பேசாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்; "வேலையை மட்டுந்தான் கத்துக்கிட்டென்னு நினைச்சேன்” என்ற வசந்தியின் வார்த்தைகளில், மண்டிக்கிடந்த பொறாமைத் தீயின் சூடு அவளுக்குத் தெரியாததால், அது, அவளைச் கடவில்லை. இவளைப் பார்க்கும் போதெல்லாம், வசந்திக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, மனதில் அழிக்க முடியாத ஒரு பாரத்தை சுமந்துகொண்டிருப்பது போன்ற ஒரு கனம் ஏற்படுவது, கமதிக்குத் தெரியாது.