பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Χ பெண்மையும் சிறிது துக்கலான கதை. அந்தக் காலகட்டத்தில், ஒரு மணப்பெண் அப்படி நடந்திருப்பாளா என்பது சந்தேகமே. நடக்க வேண்டும் என்ற ஆசையில் நடப்பது மாதிரி யதார்த்தமாக எழுதப்பட்ட கதை. இப்போதும், சுயமரியாதை இல்லாத சுதந்திரத்தை அடிதள மக்கள் இன்னும் அனுபவித்து வருகிறார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. கதைக்க முடியாத கதை, இலங்கை தமிழர்களுக்காக, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தமிழகக் கொந்தளிப்பே ஒரு இலங்கை தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்ட ஆற்றுப்படுத்தலை பதிவு செய்கிறது. சென்னை, வானொலி நிலையத்தில் செய்தி ஆசிரியராக இருந்து, இந்த பாவப்பட்ட இலங்கை தமிழ்பெண்களில் ஒரு சிலருக்கு நான் தாற்காலிக வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறேன். ஒரு தமயனிடம் சொல்லுவதைப்போல, இந்தப் பெண்கள், என்னோடு பகிர்ந்துக் கொண்ட இலங்கை கொடூரங்கள், இன்றுகூட என்னை பயமுறுத்துகின்றன. நிர்வகிகள், பலே வேசம், அபத்தங்கள், முள் மேல் நடை, போக்கிடம் இல்லாத பொழுது, சொற்பிடி ஆகிய சிறுகதைகள் என்னுடைய அலுவலக அனுபவங்கள். இந்த அலுவலகங்கள் வெளியில் நின்று பார்த்தால் ஒரு கரையான் புற்றாகத் தோன்றும். ஆனால், உள்ளே நுழைந்து பார்த்தாலோ, அதற்குள் கருநாகங்களும், நச்சுப் பூச்சிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இவைகளால் கடிப்பட்டும், திருப்பித்தாக்கியும் அலுவலகவாசியாக செயல்பட்ட எனது அனுபவப் பகிர்வுகளே இந்தக் கதைகள். குறிப்பாக ப(லே) வேசத்தில் வரும் பலவேசம்தான், அன்றாடம் ஒரு மணிநேரம் யோகாசனம் செய்து உடலை ஓம்பிய எனக்கு ரத்த அழுத்ததையும், நீரழிவையும் கொடுத்தவர்.