பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபத்தங்கள் 悠 அவரின் கை அங்குமிங்குமாக உருட்டியது. அந்தச் சாக்கில் அவள் திரண்ட சதையைப் பிடித்துக் கிள்ளியது. சுமதிக்கு வியர்த்துக் கொட்டியது. கைகை உதறிக்கொண்டே, வெளியே வந்தாள். பொங்கி வந்த கண்ணிரை துடைத்துக் கொண்டாள். லஞ்ச் டயம் வந்தது. தலைமைக் குமாஸ்தா, தனியாக இருந்தார். "என்னம்மா. சுமதி. கேன்டின் போகலியா..?” 'பசிக்கல வார்.” "இந்த வயசில. இந்தச் சமயத்தில பசிக்காமல் இருந்தால், அதுக்கு என்ன அர்த்தமுன்னா.” "ஸ்ார். நம்ம மானேஜரு எப்படி?” தலைமைக்குமாஸ்தா,நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். இரண்டு கண்களையும் பாதி மூடிக் கொண்டு பேசினார். "என்னோட இருபது வருஷ சர்வீஸ்ல, இந்த மாதிரி உத்தம புருஷன பார்க்கலம்மா. சாட்சாத் ரீராமச்சந்திர மூர்த்தின்னா, ராமச்சந்திரமூர்த்திதான்.போன வருஷமே. நான் ரிட்டயர்டாகணும். 'ஸார், பிள்ள குட்டிக்காரன். என்ன பண்ணுவேன்னு. கம்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.அவ்வளவுதான். மனுஷன். உடனே, என்ன நான் சொல்றது.புரியுதா.உடனே எம்டிக்கு டிரங்கால் போட்டாரு. ரெண்டு நாள்ல எனக்கு எக்ஸ்டென்ஷன் வந்துட்டு. அணையப்போன விளக்கில, எண்ணை ஊத்தின மகான் அவரு. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும்போது, அவர் காலுல மானசீகமா விழுறேன்." கமதி, ஏதோ பேசப் போனாள். அதற்குள் கேஸியர் வந்தார். தலைமைக் குமாஸ்தாவின் வார்த்தைகள், தன் காதிலும் விழுந்தன என்பதை நிரூபிப்பதுபோல், 'உங்களுக்கு அவர் மகான் மட்டுந்தான். ஆனால், எனக்கு அவரு கண்கண்ட தெய்வம். ஒரு