பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபத்தங்கள் 炽3 கூப்பிடவில்லை. நேராக அவளிடம் வந்தார். அவள் வலதுகையை எடுத்து, தன் தோளில் போட்டுக் கொண்டு, 'சுமதி பிலி மீ... என்னால உன்னை மறக்க முடியல. ஐ வாண்ட் யூ. ஐ வாண்ட் யூ...' என்றார். சுமதி என்ன நடக்கிறது என்று புரியாமல் சூன்யமாக நின்றாள். பிறகு, கீழே வீசி எறிவதற்காக அவர் கைகளை பிடித்து இழுத்தவளுக்கு, உதடுகள் வரை சூடான வார்த்தைகள் கொதித்து முட்டின. அந்தச் சமயத்தில் - எதிரே சக ஊழியர்கள். பத்து நிமிடத்திற்கு முன்பு மேனேஜர் அனுப்பி வைத்த அதே ஊழியர்கள். 'ஸார். கடுமையான டிராபிக் ஜாம். வேனுல போக முடியல' என்று சொல்ல வந்தவர்கள் விக்கித்து நின்றார்கள். சுமதி, அவர்களிடம் முறையிடப் போனாள். ஆனால், அந்த சகாக்கள் அவளைப் பார்த்தப் பார்வை கொடுரமாக இருந்தது. ஏழை சொல் அம்பலம் ஏறுமோ, இல்லையோ, ஒரு அபலைப் பெண்ணின் சொல் ஏறாது என்பது அந்தக் கொந்தளிப்பான சமயத்திலும், அவள் சிந்தனையைத் தட்டியது. கமதி, முகத்தை கைகளால் தாங்கிக்கொண்டே அழுதாள். உலகத்துபாவமூட்டைகள் அனைத்தும், அவள்தோளில் உட்கார்ந்து அழுத்தியது. அந்த அழுத்தம் தாங்க முடியாமல், அவள் தோள் குலுங்கியது.அதனால், லேசாக சாய்ந்த அவள்மேனியை புவியீர்ப்பு விதி கீழே இழுத்தது. தள்ளாடிக் கொண்டே வீட்டிற்குப் போனாள். மறுநாள், கமதி வரவில்லை. அலுவலகத்தில், ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. மானேஜர், அறைக்குள் முடங்கிக் கிடந்தார். தலைமைக் குமாஸ்தா, நெடிய மெளனத்தை கலைத்தார். "கடைசியில், இந்தகமதி.இவ்வளவுமோசமா,இருந்திருக்காளே. தங்கமான மனுஷன். அவரோட மனசை கெடுத்திட்டா... பாருங்களேன்."