பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கிடம் இல்லாத பொழுது "உயர் அதிகாரிகள் பயிற்சி மையம்” என்று இந்தியில் முதலாவதாகவும், ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும் எழுதப்பட்ட அந்த போர்டை, ராமையா கடுப்பாகப் பார்த்தபடியே, அந்த வளாகத்திற்குள் போனார். அங்குமிங்குமாக உள்ள அம்புக்குறிகளை உற்று உற்றுப் பார்த்தும், எதிர்ப்பட்டவர்களை கேட்டுக் கேட்டும், அவர் எப்படியோ அந்த வகுப்பறைக்குள் போய்விட்டார். அவருக்கு முன்னாலயே டை கட்டிய ஒரு மனிதர் நான்கைந்து பேர் சூழ நின்றார்.அவரிடம் எல்லோருமே உரிமையாகவும்,மரியாதையாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். மரியாதைக்குரிய ராமையாவும், அந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தார். "மன்னிக்கணும். என் பெயர் ஆர்.ராமையா. சென்னையில் டெப்டி டைரக்டர், சீனியர் ஆபீஸர்ஸ் இன் சர்வீஸ் டிரெயினிங்குக்காக வந்திருக்கேன். நீங்க.." "ஒ. ஐ. n. என் பெயர் டபிள்யூ. கன்னா. ஜான்ஸில பெர்சனல் ஆபீஸரா இருக்கேன்.” "உங்களுக்கு இங்க எல்லோரும் தெரியும் போலத் தெரியுது.” "எஸ். மிஸ்டர். ராமையா. மூணு வருஷத்துக்கு முன்னால, இதே பயற்சி மையத்தில் அசிஸ்டெண்ட் புரொபஸரா இருந்தேன். இதே மாதிரி இன் சர்வீஸ் பயிற்சிகளுக்கு கோர்ஸ் டைரக்டராகவும் இருந்தேன். அப்புறம் யூ.பி.சி. எழுதி, ஐ.ஏ. ஆண்டு ஏ.எஸ். சர்வீஸ்ல சேர்ந்தேன். நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம பாடம் எடுத்த எனக்கே பாடம் கற்பிக்கிறது மாதிரி அனுப்பிட்டாங்க."