பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 க. சமுத்திரம் அவரது ஒரே மகள் மலரைக் கேட்டு இரண்டு இடங்களில் இருந்து ஆள் அனுப்பி விட்டார்கள். அரசியலைப் பொறுத்த வரையில் ஒரு குடும்பம் கதர் வேட்டி. இன்னொன்று கரைவேட்டி, அதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. பண பலத்திலோ ஆள் பலத்திலோ ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை. அதோடு ஒரே பங்காளிக் குடும்பம். இவரோட அம்மாவும், தேனம்மாவும் பிறந்த குடும்பம். முதல் வீட்டு பிள்ளையாண்டான் முத்துவேலுவும், இன்னொரு வீட்டுப் பிள்ளையாண்டான் பழனிச்சாமியும், ஒரே தராசில் இருந்த தட்டுக்கள் மாதிரி. முத்துவேல் உரக்கடை வைத்திருக்கிறான். கூடமாட விவசாயக் கருவிகளை கமிஷனுக்கு வாடகைக்கு விடுகிறான். பழனிச்சாமியும் லேகப்பட்டவன் அல்ல. பெரிய பலசரக்குக் கடையாக வைத்து இருக்கிறான். அதுவும் பெரிய பங்களா மாதிரி கடை பொண்டாட்டியைத் தவிர எல்லாம் வாங்கலாம். இவனுக்குமோட்டார்பைக்வாகனம்.அவனுக்கு ஸ்கூட்டரே ஆசனம். ஆள் பார்வை என்று எடுத்துக் கொண்டால்கடட, முத்துவேல் புலி, பழனிச்சாமி சிங்கம். இவனுக்குத் துாக்கலான பல்; ஆனால் உருண்டையான முகம்; அவனுக்கு துாக்கலான முகம்; ஆனால் அழகான பல்வரிசை பழக்கவழக்கத்தைவைத்துப்பார்த்தால், இருவருமே சிகரெட் பிடிப்பவர்கள்;கள்ளச் சாராயத்தை மட்டும் குடிக்காதவர்கள். குணம் என்று வைத்தால், இருவருமே தங்கக்கம்பிகள். இவரை எதிரில் பார்த்தாலே போதும். முத்துவேல் 'மாமா என்று சொல்வியபடியே வேட்டியை இறக்கிப் போட்டுச் சிரிப்பான். பழனிச்சாமி சிரித்தபடியே'மாமா என்று மேல் துண்டை, தோளில் இருந்து கையில் இறக்கிக் கொள்வான். இப்போது இந்த இரண்டுபேருமே பேண்ட், சர்ட்போடுவதால் மடக்கி வைத்த சட்டையைத்தான் நிமிட்டி விடுகிறார்கள்.