பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசப் பாவம் அந்த ஒரு வார காலமும், அவன் மாதிரியே போன இடம், தெரியாமல் போய்விட்டது. எத்தனை நாளைக்குத்தான் அக்கம் பக்கத்துப் பெண்களிடம் கேம்ப் போயிருக்கார் என்று சொல்ல முடியும்? வாழ்க்கையை கேமாக எடுத்துக்கொண்டு ஒடிப் போய்விட்டவனை, எத்தனை நாளைக்கு கேம்பிற்குள் வைக்க முடியும்? கூடப் பிறந்த அண்ணனிடமே, 'வந்துடுவார். நேற்று கூட லட்டர் வந்தது. போன இடத்துல ஏகப்பட்ட வேலையாம். இன்னும் இரண்டு நாளையில வந்துடுவாராம் என்று சாமர்த்தியமாகச் சொல்லிவிட்டு, அவனுக்குத் தெரியாமலே கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன், லட்டரைக் காட்டு பாக்கலாம் என்று கேட்டபோது நல்லா இருக்கே. நீ ஒன் ஒய்ஃப் எழுதுற லட்டரைக் காட்டுவியா. என்னண்ணா நீ என்று சிணுங்குவது போல் சிணுங்கி, அந்தச்சாக்கில் அவனுக்குத் தெரியாமல் அழுது கொண்டாள். ஊரில இருந்து வந்த மாமனாரிடம்கூட - அப்பா வந்தால் இருக்கச் சொல்லு. நான் சீக்கிரமாய் வந்துடுறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார் மாமா' என்று, நிதானமாகவும் மெதுவாகவும் சொன்னால் அழுது விடுவோம் என்று நினைத்து, சீக்கிரமாகவே சொல்லிவிட்டாள். ஆனால் இப்படி எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?