பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CJr. &C On 6)/(Ö 14.5 தயங்கித் தயங்கி உள்ளே வந்து, பிறகு இவள் காட்டிய 'சாதாரணத்தால் அந்தப்பெண்தைரியக்காரியாக வெளியேறினாள். 'அடிக்கடி வாரேன்க்கா. உங்க வீடு தான் தெரிந்து போச்சே என்று சொல்லி, அவள் விடைபெற்ற போது, மேகலாவுக்கு அதுவரை சந்தேகமாக இருந்தது, சர்வ உண்மையாகத் தெரிந்துவிட்டது. மேகலா, இருட்டி போன தன் எதிர்காலத்திற்காகக் கலங்கினாள். குழந்தையின் எதிர்காலம் எப்படி ஆகுமோ என்று குழந்தை போலவே அழுதாள். இதற்குள், அவள் அடிக்கடி வீட்டுக்கு வருவதும், அவனிடம் ஒங்களைப்பற்றி எனக்குத்தெரியாதா என்று அடிகடிச்சொல்வாள்.மனைவியிடம்'டியனுக்கு இவ்வளவு நேரமாடி! என்று அதட்டுகையில், அக்கா, நீங்க அவரு சொல்றதுக்கெல்லாம் பேசாமல் இருந்தால் அவரு தலைக்கு மேல குதிப்பாரு. அன்றைக்குக் கூட அந்த தியேட்டர்ல என்னடான்னா. என்று சொல்லிவிட்டு, பேசியதை முடிக்க முடியாமல் திண்டாடியவள். மேகலாவும் திண்டாடினாள். இந்த மாலதி வருவதையும், அவனுடன், தான், தனிமையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில மணி நேரங்களை ஆக்கிரமித்துக் கொள்வதையும், மனைவி பதவி வகித்த மேகலாவால், பொறுக்க முடியவில்லை. ஒரு நாள் அவனில்லாத சமயத்தில் வந்த அவள் வந்ததும் வராததுமாக அவரு இல்லியா அக்கா என்று சொன்னபோது மேகலாவால் சகிக்க முடியவில்லை. "ஆமாம்மா என்னை எப்பப் பார்த்தாலும் அக்கா அக்கான்னு சொல்றியே, என்மேல இவ்வளவு பாசமா? 'ஒங்க மனக யாருக்கு அக்கா வரும்? கள்ளமில்லாத மனசுக்கா ஒங்க மனக. என் கூடப் பிறந்த அக்காளைவிட நீங்கதான் எனக்கு அக்காள். ஒங்கள மாதிரி பெருந்தன்மை யாருக்கு அக்கா வரும்? ஒங்கள வாய் நிறைய அக்கான்னு கூப்பிடும்போது எவ்வளவு சந்தோஷமாய் இருக்கு தெரியுமாக்கா?