பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$48 க. சமுத்திரம் விழும்படி அவனை அங்குமிங்குமாக ஆட்டிக்கொண்டே அழுதாள். அந்த ஆட்டத்தில் ஆடிய குழந்தை, அதைத் தாலாட்டாக நினைத்து சிரித்தது. இரவு வந்தது. போலீஸ் அண்ணன் வந்து முன்னறையில் உட்கார்ந்தான். பின்பு படுக்கையறையில் உழன்று கொண்டிருந்த தங்கையைப் பார்ப்பதும், முன்னறைக்கு வந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்ப்பதுமாக உலாவிக் கொண்டிருந்தான். அண்ணனும் தங்கையும் மெளனத்தால் ஒன்றுபட்டனர்.சோகத்தைப் பகிர்ந்து கொள்பவன்போல் அவன் மருமகனை எடுத்து மார்போடு அணைத்தவாரு உலவினான். இரவு மணி பதினொன்று இருக்கும். குரைத்த தெரு நாய்கள் வத்திக் கம்பின் அதட்டலில் அடங்கின. பூட்ஸ் ஒலிகள் கேட்டன. கதவு தட்டப்பட்டது. அண்ணன்காரன் உள்ளே வந்து,தங்கையை வெளிக்கதவைத் திறக்கும்படிசைகை செய்தான்.எதையுமே பொருட்படுத்தாததுபோல் இருந்த தங்கையின் கையைப் பிடித்து நிறுத்தி, முதுகைத் தள்ளி முன்னறைக்குக் கொண்டு வந்தான். மேகலா கதவைத் திறந்தாள். கதவைப் போல் கண்களையும் அகல விரித்தாள். கையில் லத்தி கம்புகளுடன் நான்கு அய்ந்து யூனிபாரக்காரர்கள். அவர்களுக்கு மத்தியில் தலை தொங்கிப்ப்ோன கணவனும், அதே அந்த மாலதியும். போலீஸ் அதிகாரி கனிவான கண்டிப்புடன் கேட்டார். 'ஏம்மா, இவரு ஒன் புருஷனா? மேகலா, தன் தலையை லேசாக ஆட்டினாள். 'இவரையும் இந்தப் பொண்ணையும் ஒரு வீட்டுவ ஏடாகோடமான சந்தர்ப்பத்துல பிடிக்க வேண்டிய அவசியம்