பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத இரவு மங்கலமாகத் துவங்கிய கல்யாணச் செயல்பாடுகள், இப்போது அமங்கலமாக முற்றுப் பெற்றுக் கொண்டிருந்தன. கல்யாணம் முடிந்து விட்டது. சாப்பாட்டுக்கு முந்தியவர்களுக்குக் கிடைத்த ரசமே, பிந்தியவர்களுக்குச் சாம்பாராக்கப்பட்டு, பந்தியும் முடிந்து விட்டது. மண மேடைக்கு முன்னால் ஜோடிப் பொருத்தம் பார்ப்பதற்காகக் கூடிய இளவட்டங்கள், இப்போது கண்ணில் தட்டுப்படவில்லை. எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பில்லாமலே வரும் சிறுவர் - சிறுமியர்கள், இந்தக் கூட்டத்துக்கும் வந்து, அய்யரின் மந்திரம் அவருக்கே கேட்ட முடியாத அளவுக்கு, கத்தினார்கள். பந்தல் கால்களுடன் கட்டப்பட்ட குலை வாழைகளின் முந்தானைகளான இலைகளைக் கைகளால் கோதித் துகிலுரிந்து, அவற்றைப் பிடித்துக் கொண்டே கால்களால் கற்றி, வலம் வந்தார்கள். 'ஸ்பீக்கர் செட் சைலண்டாகிவிட்டது. மேளக்காரர்கள் ரேட் சம்பந்தமாகப் பெண் வீட்டாருடன் தகராறு செய்து கொண்டிருந்தார்கள். கரெண்ட் ஆப் ஆன ஒரு மணி நேரத்துக்கு உரிய பணம், பேசிய தொகையிலுந்து பிடிக்கப்படும் என்று பெண்ணின் பெரியப்பா ஒலிக்பெருக்கிக்காரரிடம் வாய் பெருக்கிக் கொண்டிருந்தார். உண்ட மயக்கத்திலும், மணமக்களை உற்று உற்றுப் பார்த்த உணர்ச்சிப் பெருக்கத்திலும் ஒய்ந்து போன கல்யாணத் தொண்டர்கள் மண மேடையிலேயே துரங்கினார்கள். அதுவும் கொசுக்கள் கடிக்காமல் இருப்பதற்காகத் தலைகளில் துண்டுகளை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டு, பிணம் மாதிரிக் கிடந்தார்கள். 13