பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 க. சமுத்திரம் வீட்டின் வராந்தாவை அடுத்து இருந்த உள்ளறையில் புதுப்பெண்ணைச் சுற்றி, ஒரே பெண்கள் கூட்டம். தவளைக் குரலில் அவர்களின் பேச்சு, கிககிக சத்தமாகக் கேட்டதே தவிர அதன் சாரம் வெளியே பாயவில்லை. தந்தையின் சொல்லை மந்திரமாகக் கொண்டவன் போல்,புது மாப்பிள்ளை செல்லப்பாண்டி, தத்தம் ஊர்களுக்கு அவசர அவசரமாகப் புறப்பட்ட உறவினர்களை தெரு வரைக்கும் வந்து வழியனுப்பப் போனான். அவர்கள், அங்கேயே நின்று, அவனோடு தத்தம் நெருக்கத்தை, தெருக்காரர்களுக்குக் காட்டும் வகையில் நெருங்கி நின்று சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நகர வைத்துவிட்டு, வீட்டுக்குள் இருக்கும் புது மனைவியுடன் நெருங்கி அமர ஆசைப்பட்ட அந்த மாப்பிள்ளைப் பையன், சொந்தக்காரர்களுக்கு முன்னால் நடந்து, அவர்களுக்கு வழி காட்டினான்.எப்படியோபாதித்தெருவரைக்கும் நடந்து அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு, மனைவியை பார்பதற்காகத் திரும்பி நடந்தான். மனைவியே தெருவுக்கு வந்து, என்ன நினைச்கட்டிங்க. இப்படித்தான் என்னை ஏங்க வைப்பதா என்று கண்ணால் அதட்டுவது போல் கற்பனை செய்தான். அந்தக் கற்பனையே, அவனை கிறங்க வைத்தது. செல்லப்பாண்டி, இடையே தட்டுப்பட்ட ஒருசிலரைப் பார்க்காதவன் போல் சக்கரக் கால்கள் கொண்டவனாய், பெண் வீட்டைப் பார்த்துத் தாவித்தாவி நடந்தான். விரல்கள், பாதங்களிலி ருந்து பிய்த்துக் கொள்வது போலவும், கால்கள் உடம்பிலிருந்து விலகிக் கழன்று கொள்ள முயல்வது போலவும், அவன் நடக்காத குறையாக ஓடி, ஓடாத குறையாக நடந்தான்.பிறைநிலா நெற்றியும், காதளவோடிய கண்ணும், பெரியோர் ஆசீர்வதித்துப் போட்ட மஞ்சளரிசி நிறமும் கொண்ட மனைவியின் கூந்தலைப் பிறர் அறியாது இழுக்கத்துடித்தவனாய், அருகில் அமர்ந்திருக்கும் சாக்கில், அவள் கையைக் கிள்ள நினைத்தவனாய், அவள் நாணத்தில கண் சிவந்து, தன்னை மருட்சியான மகிழ்வோடு பார்க்கும் நேர்த்தியைக்