பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத இரவு #79 விட்டான். அதே சமயம், மண மேடையில், பெண்ணில் அழகால் கவரப்பட்டு, அந்த அழகைத் தன்னை அறியாமல் உபாசித்தான். அப்போதுகூட, தனது கருப்பு அவனது வெள்ள்ை மனத்தை உருத்தவில்லை. செல்லப்பாண்டி, நாற்காலியிலிருந்து எழுந்தான். கல்யாண வீட்டின் எல்லைப்பரப்புக்குள்ளேய சிறிதுநேரம் உலாவினான்.கை நனைக்காமல், கை கழுவியவளை, நினைத்தபடியே சூனியத்தைத் துரத்துபவன்போல் உலாவினான்.பின்னர்கல்யாணக்கூட்டத்தின் கண் பார்வை எட்டாத குளத்துக்கரைப் பக்கமாக நடந்தான். அவனைப் பின்தொடப் போனவர்களை சைகையாலேயே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, குளத்துக்கரைமேல் நடந்தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் கரைக்குக் கீழே உற்றுப் பார்த்தான். பாழுங் கிணறு.. அல்ல. நான். நானே. பெண்ணைப் பொறுத்த அளவில் நான் அதுவே. சிந்தனை, அவனை பேயாய் அலைக்கழித்தது. 'மாப்பிள்ளை குடிகாரன்.ஸ்திரீலோலன் என்று எவனாவது ஒருவன் எழுதியமொட்டை மனுவைப்படித்துவிட்டு,பொறுப்புள்ள பெண் அழுவாள். அவன், நல்லவன் என்று அறிந்ததுமே அவள் அழுகை ரெட்டிப்பு மகிழ்ச்சியாகும். அல்லது கெட்டவனாக இருந்தால், அவன் தானாய்த் திருந்தியோ, அல்லது அவள் திருத்தியோ, தாம்பத்தியம் எந்த'பத்தியம் இல்லாமலும் செழிக்கலாம். காதல் தோல்வி என்றால் கூடக் காலப் போக்கில் சரியாகிவிடும். ஒல்லியாக இருக்கிறான் என்றால், சாப்பிட்டுத் தடியாகலாம். தடியன் என்றால், உண்டி கருக்கி, அந்தப் பெண்ணை மகிழ வைக்கலாம். உடம்பில் ஏதாவது சதைத் திரட்சி இருந்தால், அதைக் கூட அறுத்து விடலாம். ஆனால் உடம்பு முழுவதையுமே கருப்பு என்று ஒருத்தி ஒதுக்கும்போது, அந்த உடல் முழுவதையுமே அறுத்தெறிந்தால் அன்றித் தீராத பிரச்சனை இது. செல்லப்பாண்டி,மனம்போனபோக்கில் நடந்தான். பிடிக்காத பெண்ணுடன் எப்படி வாழ்வது? எங்கேயாவது ஒடிப்