பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத இரவு 185 அவள், நிலைகுலைந்து நின்றாள். தன்னையே வெறுப்பவள் போல், முகத்ச்ை கழித்தாள். பிறகு விக்கித்தபடியே மெள்ள நடந்தாள். செல்லப்பாண்டி தூங்கிக் கொண்டிருந்தான். கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து அவன் தலை முடியை மெள்ள மெள்ளக் கோதி விட்டாள். ரிஷி கர்ப்பம் மாதிரி, நடக்காத முதலிரவிலேயே பிள்ளை பெற்று, அந்தப் பிள்ளையைப் பார்ப்பது போல், அவனைப் பார்த்தாள். பிறகு அவன் கரங்களை எடுத்துத் தன் கரங்களுக்குள் அடைக்கலமாக்கிக் கொண்டாள். அந்தச் சூழலில், அந்தப் பெண்ணுக்கு முதல் தடவையாக, ஒரு ஆண் மகனைத் தொடுகின்ற ஸ்பரிச இன்பம் இல்லைதான். ஆனாலும் - நிலையற்ற இளமை வேகக் கற்பனைத் தீ, நிலையான தாய்மையின் குளிர்மையில் அடங்கித்தானே ஆக வேண்டும்? - கல்கி விடுமுறை மலர்-1982 ● ఈ్మ•