பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவேறு கண்கள் s மேகநாதன், சிரித்துக்கொண்டுதான் சொன்னார். புறநானூற்று போர்க்கள வீரர்போல கழுத்துப் பட்டையை அங்குமிங்குமாய் அசைத்து சரிப்படுத்திவிட்டு, "போயிட்டு வாரேம்மா." என்றார். பாண்டியம்மாள், மகனையே பார்க்கிறாள். மருவி மருவி பார்க்கிறாள். இந்த மகனுக்கு சின்ன வயதில் வலிப்பு வரும்போது எப்படி துடித்தாளோ, அப்படி துடிக்கிறாள். பின்னர் கிராமத்தில் பின்னங் கொட்டை மாதிரி சதையும் எலும்பும் தனித்தனியே தெரியாமல் இறுகிப் போயிருக்கும் தனது இளைய மகனை மனதுக்குள் கொண்டு வருகிறாள். ஒருநாள் கூட, மண்டைக்குத்து, வயிற்று வலி என்று மருந்துக்குக்கூட சொல்லாத அந்த சின்ன மகன், அவளுள் ஒரு உறுத்தலை ஏற்படுத்துகிறான். பாண்டியம்மாள், இப்போது மனதுக்குள் வேறுவிதமாய் புலம்புகிறாள். "தெய்வமே. ஒரு கண்ணை நோயாயும், இன்னொரு கண்ணை நல்லாயும் வைச்சுட்டியே...? இந்த கொடியில பூத்த பெரிய பூவை வாடவச்கம், சின்னப் பூவை மலர வச்சும் வேடிக்கை காட்டுறியே. அய்யோ. நான் பெத்த மவன்தானே சின்னவனும். அவன்மேல என் கண்ணுபடுதே. தெய்வமே. தெய்வமே. கோழி மிதிச்சு குஞ்சும் நோகதது, மாதிரி என் கண்ணையும் அதே மாதிரி ஆக்கு." மேகநாதன், இன்னொரு தடவை, "போயிட்டு வாரேம்மா” என்கிறார். நித்தியகண்டமாய் வாழும் தான் பெற்ற பிள்ளை நிறைந்த ஆயுளோடு இருக்கவேண்டும் என்று நினைத்ததுபோல், அந்தத்தாய், அப்படிப்புறப்பட்ட மகனை இழுத்து பிடித்து தோளில் சாத்திக் கொள்கிறாள். தினத்தந்தி பொன்விழா மலர் 1993 o ఈ్మ•