பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烃 க. சமுத்திரம் சைக்கிளில் சரோசாவும், போலீஸ்காரரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சரோசா, பின் இருக்கையில் இருந்து இறங்கி, காம்பவுண்ட் கவரை லாகவமாகத் தாண்டி, மேஜைமீது பூக்களைப் பரப்பியபோது போலீஸ்காரர் அவள் கைகளை செல்வமாக வருடினார். அவள் கன்னத்தின் அருகே அவர் கை போனபோது, சரோசா தன் மோவாயால் அவர் கையைத் தட்டி விட்டாள். 'சீ' அக்கம்பக்கத்துலே...' என்று செல்லமாக சிணுங்கினாள். அப்போதுதான், அவருக்கும் மற்றவர்கள் மனிதர்களாகத் தெரிந்தது. சைக்கிளைவிட்டு இறங்கியபடியே சினனான் அருகே போனார். 'ஏண்டா சின்னா... சீக்கிரமா வண்டியை கொண்டு யோயேண்டா. டிராஃபிக்கு ஏனடா இடைஞ்சலா நிறுத்தறே? கயிதே. போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குது. பாரு.” "எந்தப் போக்குவரத்துக்கு சாமி.?” "என்னடா, எதிர்க்கேள்வி போடுற? பஸ் ஸ்டாண்ட் பக்கமா வண்டி நிக்கப்படாது. வேணுமுன்னா அந்தப் பக்கமா போ. டேய் செருப்பு கண்ணு தெரியாத நேரத்திலே என்னத்தடா தைக்கிற. ஏய் கீரை வழியை அடைக்கிறாபோல ஏன் நெப்புற.?” சின்னான் வண்டியோட வண்டியாய் நின்றான். சீனன் செருப்போடவே இருந்தார். கீரையம்மா, ஒரு கண்டு விரலைசுடட நீட்டவில்லை. அந்த போலீஸ்காரருக்கு, அவர்களின் பராமுகம் தன் முகத்தை மேலும் கீழமாய் ஆட்ட வைத்தது. பிறகு, அதுவே தன்மானம் ஆகியது. இறுதி எச்சரிக்கையாய் கேட்டார். "சொல்றது காதுலே விழலே. டேய், வண்டிக் கயிதே. வண்டியைத் தள்றியா, இல்லியா?”