பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 க. சமுத்திரம் 'பொண்ண கூட்டிக்கிட்டு வாங்கய்யா' என்றார் நாவிதர். மல்லிகா, தலைப்பூவின் பாரம் தாங்காதவள்போல், தலை கவிழ, கண்கள் லேசாகமூடியிருக்க, நான்கைந்துபெண்கள் அவளைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு வந்து மணவறையில் மாப்பிள்ளையருகே உட்கார வைத்தார்கள். ஒருவர் உடம்பு, ஒருவர் உடம்புடன் பட்டபோது, இருவருமே பிரக்ஞை அற்றவர்கள் போல், அந்த உணர்வையே ஒரு பிரக்ஞையாக எடுத்துக் கொண்டவர்கள்போல், கண்களைச் சிமிட்டி,லேசாய்நெளிந்தார்கள். ஆமணக்குச் செடிபோன்ற பொன் நிறமும், அதற்கேற்ற உடல்வாகும் கொண்ட மல்லிகாவைப் பார்த்து, மாப்பிள்ளை வீட்டு கோஷ்டியின் இளைய தலைமுறை மகிழ்ச்சி அடைந்ததுபோல் ஒருவரை ஒருவர்பார்த்து கண் சிமிட்டியபோது, முதிய தலைமுறை, அவள் போட்டிருக்கும் கால் கிலோ தங்க நகைகளைப் பார்த்து திருப்திபட்டவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டார்கள். ‘எங்க மல்லிகா. ஒங்க பையனை விட உசத்திதான். என்றான் ஒரு பெண்வீட்டு வம்பன். ‘எங்க பையன் பி.ஏ., ஒங்க பொண்ணு எஸ்.எஸ்.எல்.சி.' என்றாள் ஒரு பிள்ளை வீட்டு வம்பி, 'மல்லிகாவோட எஸ்.எஸ்.எல்.சி.யும். ஒங்க பையனோட பி.ஏ.வும் ஒன்றுதான் என்றான் இன்னொரு குறும்பன். 'அப்படின்னா ஒங்க பொண்ணு அந்தக் காலத்துப் படிப்பா. அவ்வளவு வயசா? என்றான் மாப்பிள்ளை வீட்டு மைனர் ஒருவன். ‘என்னடா செத்த பேச்சு பேகறிய. அர்த்தநாரீஸ்வரர் மாதிரி அவங்க ரெண்டு பேருமே ஒண்ணுதான்” என்று அர்த்தத்துடன் பேசினார் ஒரு கிழவர்.