பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமும் பெண்மையும் 29 'ஏய். பொண்ண. ஆற அமர பாக்கலாண்டா. இப்போ, கையில் இருக்கும் தேங்காய, தவறவிட்டுடாதடா...' என்று மாப்பிள்ளைக்கு தேங்காய் பிரக்ஞையை ஏற்படுத்தினான் ஒருவன். மணமகள் மல்லிகா நாண, மாப்பிள்ளை கோண, கல்யாணக் கூட்டம், திடீரென்று சிரித்தது. ஒருவர், மங்கல நாண் இருந்த தாம்பாளத் தட்டத்தை கூட்டத்திற்கிடையே கொண்டுபோக, சபையோர், தாலியைத் தொட்டுக் கும்பிட்டார்கள். 'கெட்டி மேளம். கெட்டி மேளம். மாப்பிள்ள தாலி கட்டப் போறாரு. என்றார் நாவிதர். 'கெட்டி மேளம் அடிக்கவில்லை... மேளக்காரர்கள் வாசலுக்கருகே, அடிக்காத குறையாக பேசிக் கொண்டிருந்தவர் களையே பார்த்தார்கள். கூட்டத்தில் ஒரு பகுதி எழுந்து அங்கே குழுமியது. பெண்ணின் ஊரைச்சேர்ந்த ஒரு வயோதிகர், வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தபோது, அவருக்கருகே இருந்த ஒரு மீசைக்காரர் படபடப்பாகப் பேசினார். 'இவரு இந்த ஊரு நாட்டாம. நீங்க இப்படிப்பேசப்படாது' மாப்பிள்ளை கோஷ்டியின் ஒரு மானஸ்தர், கம்பீரமாகப் பதிலளித்தார். 'நாட்டாமையாவது. காட்டாமையாவது... எங்களுக்கு எடுத்தும் பழக்கமில்லை. கொடுத்தும் பழக்கமில்லை.' 'அது ஒங்க ஊர்ல. ஆனால் எங்க ஊர்ல பொண்ணு எடுக்கவங்களுஞ் சரி. கொடுக்கவங்களுஞ் சரி. நாட்டாமைக்கு. ரெண்டே முக்கால் ரூவா. அதுதான் ரெண்டு ரூபாய் எழுபத்தஞ்சு பைசாவும். மூணு தேங்காயும் ஒரு எலுமிச்சம் பழமும், வெத்தில பாக்கோட கப்பமா கட்டணும்: