பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமும் பெண்மையும் 33 'நாட்டுக்கு சுதந்திரம் வந்தாச்சு... நாங்களும் ஒட்டு போட்டாச்சு. அப்பேர்ப்பட்ட சமிந்தாரே எங்க காதுல விழத குறையா ஒட்டு கேட்டாச்சி. இருக்கிற சொத்த வித்து வித்து திங்கிறதும் தெத்தி பிழைக்குதுமா இருக்கிற இவரு நாட்டாமை இல்ல. ஆம போற வீடு மாதிரி. மாப்பிள்ளை! மேடையில ஏறும். மாப்பிள்ளை வேகமாக ஒடிப்போய் மணமேடையில், ஒட்டிக் கொண்டான். அந்த மேடை நோக்கி ஒடப் போன மல்லிகாவை, அச்சம், மடம், நாணம் போன்ற இத்தியாதிகளை கருதியோ என்னம்மோ, சில பெண்கள் அவளை கைதாங்கலாக பிடித்துக் கொண்டு மேடையில் ஏற்றினார்கள். நாவிதரின் ஆணைப்படி, மாப்பிள்ளை தாம்பாளத் தட்டில் இருந்த மாங்கல்யத்தை மல்லிகாவின் கழுத்தில் கட்டியபோது, மேளக்காரர்கள் யாரும் சொல்லாமலே வாசித்தார்கள்.நாதஸ்வரங்கள் கம்பீரமாக ஒலித்தன. கூட்டத்தில் பெரும்பான்மையினர், கையிலி ருந்த பிடியரிசியை எடுத்து ஆனந்தமாக வீசினார்கள். கூட்டத்தில் ஒரு பகுதி-ஒரே ஒரு சின்னஞ்சிறு பகுதிதான் கோபமாக வெளியேறியது. அண்ணா பொங்கல் மலர்-1980 o *