பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சு. சமுத்திரம் அவர் கிளாஸ் எடுக்கும்போது, கூடுமானவரை விமானப் பயணத்தை அவாய்டு செய்யுறதா, சொன்னாரு 'நானே கேட்டேன்யா... அவர் பறந்து வரார்ருன்னு ராமதுரை சொன்னான். அதான் அவரோட பி.ஏ. சொன்னான்." "பறந்து வரார்ருன்னு சொன்னதை, ஏன் பிளைட்டுன்னு எடுத்துக்கிறீங்க? அவசரம் அவசரமாவாராரு எங்கிற அர்த்தத்துவ சொல்லி இருக்கலாமில்லயா?” 'அடப்பாவி.. அவன் தமிழ் ஆர்வத்துக்கு நானா அகப்பட்டேன்?” ஆதிகேசவன் டெலிபோனை கற்றோ கற்றென்று கற்றினார். தில்லி ராமதுரைக்கு டெலிபோன் காவடி எடுத்தார். லயன் கிடைக்கவில்லை. இப்போது ஏ.ஓ., ஆடிட் அப்ஜக்கஷனுக்கு பதிலைக் கண்டுபிடித்தவர் போல், துள்ளிக் குதித்துப் பேசினார். "நம்ம போனுக்கு யாராவது கால் போட்டாலும், லயன் கிடைக்காது. கொஞ்சம் டெலிபோனை அப்படியே வையுங்க &#ffff...” ஆதிகேசவன், டெலிபோனை வைக்கவும், அது மணி அடித்து முனங்கவும் சரியாக இருந்தது. ஒரு வேளை அது தில்லி காலோ என்று பயபக்தியுடன் எடுத்து, எரிந்து எரிந்து விழுந்தார். நான் டில்லி லயன் கிடைக்கலேன்னு அவஸ்தைப் படறேன். உனக்கு, பாமாயில் கிடைக்கல என்கிறதா பெரிசாப் போச்சு. டெலிபோனை வை. என்ன... மிரட்டறே? வீட்டுக்கு வந்தா என்னடி பண்ணுவே. வைடி போனை.” ஆதிகேசவன், டெலிபோனை வைக்காமல் காதுகொடுத்துக் கேட்டார். அவர் மட்டுமல்ல, அங்கேயிருந்த எல்லாரும்; அவர் மனைவி தர்மபத்தினி, கணவன் சொன்ன சொல்லைத் தட்டாதவர்.