பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. க. சமுத்திரம் ஆதிகேசவன், அனைவரையும் பார்த்து பரிதாபமாக கருத்துரைத்தார். 'இந்த காலத்துல பெரிய பொறுப்புல இருக்கிறவங்களோட மவனுகளும் மிரட்டுராங்க. தப்பித் தவறி வாயில தமிழ் வந்ததுக்காக என்னை போய் தமிழ் வெறியரை இருக்கபடாது என்கிறான், அந்த பயல், 'புரோமோட்டி அருளப்பன், ஆதிகேசவனுக்கு, ஆறுதல் சொல்லாமல் கடுக்காய் கொடுத்தார். "ஆனா சார். ஒரு வேள... இங்கிருந்து புறப்படறதை கம்மிங்ண்னு சொல்லியிருக்கலாமே?” "என்னய்யா சொல்றே?" "எஸ் சார். அங்கே இருந்து கம்மிங்ன்னு டெலிபோன்ல சொன்னா, டில்லிக்கு கம்மிங்ன்னு அர்த்தம். இங்கிருந்து கம்மிங்ன்னாடில்லிக்கு கோயிங்க்னு அர்த்தம். எனக்கென்னமோ டைரெக்டரு மகன், அவன் அப்பன் ரயிலில சென்னையிலிருந்து புறப்படறத சொல்லியிருப்பான். ராமதுரை ஏற்கனவே அவரு வருவதை உங்ககிட்ட சொல்லிட்ட அனுமானத்துல போகிறதை மட்டும் சொல்லியிருப்பான்." ஆதிகேசவன் உச்சந்தலையில் இரண்டு கைகளையும் சேர்த்துக் கட்டினார். இளங்கோ ஒரு யோசனை சொன்னான். "டைரெக்டர் மகன் கிட்ட பழையடியும் பேகங்க சார்” 'அவ்வளவுதான். அப்புறம், அவன் அப்பன வரவேற்க நானிருக்கமாட்டேன். பிள்ளைக்காரன் அவரு காதுல ஊதிடுவான். தற்செயலா தமிழிலபேசினதே தப்பாப்போச்சு. இந்த ஆசாமி மட்டும் காலிஸ்தான் ஆளாக இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?" இளங்கோ, இடைமறித்தான்.