பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் 49 "இங்க வர்ல சார். அங்கேதான் வந்திருப்பாரு...” "ஏன் மிஸ்டர் உனக்கு பதவிக்குரிய திறமை இல்வியே. அங்க வந்திருந்தால், நான் எதுக்கு இங்கே வரேன்? நெசமாவே உனக்கு டைரெக்டர் நேரடியா தெரியுமா, இல்ல புளுகுனியா? அய்ய்யய்யோ.. மோசம் போயிட்டேனே. இந்த இளங்கோவால மோசம் போயிட்டேனே. இந்த ஏ.ஓ. அப்பவே மறிக்கிறது மாதிரி அபசகுனமா பேசினார். அது பலிச்சுட்டே... மோசம் போயிட்டேனே. மோசமாய் போயிட்டேனே.” ஆதிகேசவன், அலறும் ஒசைக்கு பின்பாட்டுப்பாடுவதுபோல், எல்லோரும் இக்கன்னாபோட்டார்கள். ஆதிகேசவனுக்கு டைரெக்டர் என்ன செய்து விடுவாரோ என்று பயம். இவர்களுக்கு ஆதிகேசவன் என்ன செய்திடுவாரோன்னு பயம். இந்தச் சமயத்தில் மைதிலி வந்தாள்.கையில ஒரு செவ்வகக் காகிதத்தை ஆட்டியபடியே சிலுக்கி மினுக்கி வந்தாள். "சக்சஸ் சார் சக்க்சஸ். ரிசர்வேஷன் கிடைச்சுடுத்து. ஏ.ஓ. சொன்னது மாதிரி நம்ம டைரெக்டருக்கு கெஸ்ட் ஹவுசில தங்க. அந்தஸ்து இல்ல. ஆனாலும் நான் வாங்கிட்டேன.” "இந்தாம்மா... உன் பெருமைய அப்புறம் வச்சிக்கோ. இல்லன்னா நீ போய் தங்கிக்கோ.” மைதிலி ஒன்றும் புரியாமல் விழித்தபோது, அவள் விழியோடு விழிவிட்ட இளங்கோ, ஏதோ ரகசியமாகச் சொன்னான். இந்தச் சமயத்தில் எடுபிடி ஆட்கள் மாதிரி நின்ற கிளார்க்குகளில் ஒரு துடிப்பான இளைஞன் தடிப்பாகக் கேட்டான். யூனியன் லீடர். அவர்களுக்கு கேட்கும்படி தனது சகாக்களிடம் ஒரு சொற்பொழிவையே நிகழ்த்தினான். "டைரெக்டரும் ஒரு மனுசன்தான். அவர் வராருங்கிற எக்சைட்மென்டல நடந்ததினால ஏற்பட்ட விவகாரம் இது. ரயில்வே ஸ்டேஷன்லேயும் ஏர்போர்டிலேயும் மிஸ்டர் ஹரி சிங்.