பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்க முடியாத கதை 53 இதற்குள் ஒருத்தி, "எப்போ கல்யாணம்? அவர் பேரு என்ன? நீ காதலிச்ச அதே ஆள்தானே?" என்றாள். "படித்துப் பாரேண்டி” என்ற சித்திரா, அவளுக்கும் ஒரு அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, அங்கேயே திருமணம் நடந்து கொண்டிருப்பது போல் நாணப்பட்டபோது, அதே அந்த வெடிவால் மாணவி, "இவள் பேரு சித்திரா. அவர் பேரு என்னவா இருக்கும்? தெரியலியா நான் சொல்றேன். பங்குனி. இல்லேன்னா வைகாசி" என்றாள். உடனே, இன்னும் அவளிடம் வன்மம் வைத்த தமிழ்க்காரி “ஏண்டி? கர்நாடகமாய் பேசுறே? சித்திரை சித்ராவா ஆயிட்டாள் பங்குனி, பங்குனியா ஆயிடும் வைகாசி, வைகான்னு ஆயிடும். ஏய். சித்ரா உன் அவருக்கு என்ன, என்ன பேருப்பா? முந்தின மாதமா? பிந்தின மாதமா?” என்றாள். உடனே வெடிவால், 'இன்னும் கல்யாணமே ஆகல! அதுக்குள்ளே எப்படி மாதம் வரும்?” என்றாள். மணக்கப் போகிறவளோட வந்த விடுதி மாணவியர் செயலாளர் தமயந்தி குமுதினியை உரிமையாேடு கண்டித்தாள். "என்னடி குமுதினி சித்ராவுக்கு ஏதாவது செய்யனுமுன்னு நன்கொடை வசூலிச்சோம். நீகண்டுக்கவே" என்று சொன்னபடியே, பாதி மையான ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில், குமுதினி எதையோ எழுதி நீட்டிவிட்டு, மேஜையைத் திறந்தபோது, செயலாளப் பெண் ஆச்சரியம் தாங்க முடியாமல் கத்தினாள். "அடேயப்பா, ஐநூறு ரூபாய்." எல்லா மாணவிகளும், தொலைக்காட்சிப் பெட்டியை நோக்காமல், அந்தக் காகிதங்களையே பார்த்தபோது, குமுதினி ஒரு சின்ன அட்டைப் பெட்டியைத் திறந்தாள். 'சித்திரா, இங்கே வா. இது உன் கைக்கு சரியாய் இருக்கான்னுபாரு இல்லேன்னா நகைக் கடைலே போய் மாத்திட்டு வாரேன்.”