பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 க. சமுத்திரம் தயங்கியபடி வந்த சித்திராவை தன் பக்கம் இழுத்தபடியே, குமுதினி அவள் கையில் மோதிரத்தை மாட்டினாள். பிறகு, “ஒனக்குன்னு செய்தது மாதிரியே இருக்குது” என்று சொல்லி விட்டு, மோதிரத்தைக் கழற்றப் போன சித்ராவை தடுத்து. 'ஒன்னவர் விரல்லேயே இருக்கட்டும். ஒன் அவர் கல்யாண மோதிரம் போடுமுன்னாலேயே நான் போட்டதாய் இருக்கட்டும். அப்பாகிட்டே இருந்து இந்த மாதக் கோட்டா வர்லே. இல்லேன்னா பெரிசாவே வாங்கியிருப்பேன்" என்றாள். மாணவிகள் பிரமித்தார்கள். சிலர், பணத்திமிரைக் காட்டுகிறாள் பாரு' என்றுகூட, தங்களை அறியாமல் நினைத்துவிட்டு, அப்புறம் தலைகளில் மானசீகமாகக் குட்டிக் கொண்டார்கள். அப்பா, தொழிற்சாலை வைத்திருப்பவர். சென்னை நகரில், தனிப்பங்களாவில் இருக்க வேண்டும் என்று அவர் வாதாடி எழுதியிருந்தாலும், மற்ற மாணவிகளோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கொகத் தொல்லையும், வார்டனம்மா தொல்லையும் நிறைந்த விடுதிக்குள் வந்திருப்பவள் குமுதினி. லண்டனில் படிக்க வேண்டும் என்று அப்பா சொன்னாலும், படித்தால் தமிழ்நாட்டுத் தலைநகரில்தான் படிப்பேன் என்று பிடிவாதம் போட்டிருந்தவள். இந்த கல்லூரியில் இதே சித்திரா அவளுக்கு உயிர்த் தோழி ஆகிவிட்டாள். சித்திராவும், அவள் மெய்காவலாளிகளும் போய் விட்டார்கள். மாணவிகள் தொலைக்காட்சியை உற்று நோக்கினார்கள். குமுதினிக்கும் அந்த தொலைக்காட்சியின் ஒலியும், ஒளியும், அவள் மனத்தில், காசிநாதனை ஒளிரூபமாக்கி காட்டியது. காசிநாதன் இப்போ என்ன செய்வார்? என் மாதிரியே என்னையே நினைத்தபடி இருப்பாரா? மதுரைக்கு வரணுமுன்னாரே, வந்திருப்பாரா? தொலைக்காட்சியில், அந்த நிகழ்ச்சி முடிந்து, அடுத்த நிகழ்ச்சி துவங்கியது. ஒரு சில மாணவிகள் ஒடிவிட்டார்கள்,