பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை 79 தோற்றம். அதுவே அவர்களுக்கு யானை தோற்றமாகிறது. திமிறி நிற்கும் பம்பைத் தலையும், தலைமுடியிலிருந்து இரண்டு மூன்று விழுதுகளாய் விழுந்துகிடக்கும் சடைகளும், அவர்களை பயமாக்குகிறது. ஆனாலும் அந்த கண்வெளியிடும் ஒளிக்கற்றைகள் அவர்களின் பயத்தை பாதியாக குறைத்து பயபக்தியாக்குகிறது. வைகுண்டரின் கட்டிலுக்கு கீழே, ஒரு மனையில் வரம்பெற்றான் பண்டாரம் உட்கார்ந்து, அய்யாவிடம் முறையிடும் எளிய சனங்களின் கோரிக்கைகளை காதுகுவித்து உள்வாங்கி, பின்னர் அய்யாவின் முகபாவனையை பார்த்து அதற்கேற்ப அவர்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கலயத்தில் உள்ள செம்மண்ணில் ஒரு திரளை எடுத்து, அந்த மக்களுக்கு தொட்டு நாமம் சாத்தினார். அவர்களது உள்ளங் கைகளில், ஒரு பெரிய செப்பு தவலையில் உள்ள முத்திரி கிணற்று நீரை, ஒரு குவளையில் மொண்டு, ஐந்து தடவை ஊற்றி சிறிது மண் எடுத்து அவர்கள் வாயில் போட்டு குடிக்கப் பணித்தார். அய்யா இருக்க பயமேன் என்று அவர்களை ஆற்றுப்படுத்தினார். அவ்வப்போது, வைகுண்டரைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டார். சில சமயம், அவரது வாயருகே காது குவித்தார். வைகுண்டரின் பஞ்ச பாண்டவ சீடர்கள் வரிசை மீறும் கூட்டத்தை வழிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அய்யாவின் வாகனக்காரர்கள், அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர், தீராமல் கிடந்த தங்களது வியாதிகள், அய்யாவால் தீர்ந்துபோனதை சத்தம்போட்டே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரகர சிவ சிவ உச்சரிப்பில் அவர்களின் வாய்களில் அவை, மந்திரச் சொற்களாக ஒட்டிக்கொண்டன. அடிக்கடி தரிசனத்திற்கு வந்துக்கொண்டிருப்பவர்கள் குனிந்த நிலையில் நின்று அய்யா நாங்கள் அறிந்து அறியாமல் செய்ததெல்லாம் அய்யா பொறுக்கணும் என்று ஐந்து தடவை திரும்ப திரும்பச் சொல்லி கைகளால் வாய்களைத் தட்டினார்கள். பின்னர் நிமிர்ந்து நின்று 'அய்யா பொறுத்து - அய்யா மாப்புத்தந்து-அய்யா வச்சி