பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

கோதப்படும் ஒர் பொய்ப் பொருளன்று என்பதை முடிவாக நிரூபணம் செய்துவிட்டாள்.

உண்மை யாதெனில், ஜப்பான் ஏககாலத்தில் புதியவளும், பழையவளுமாகினுள். அவளுக்குக் கிழக்கு (ஆசியாக் கண்டத்துப்) பயிற்சி முன்னேரிட மிருந்து கிடைத்தது; அப்பயிற்சி எப்படிப்பட்டது ? மெய்யான செல்வமும் வலிமையும் வேண்டினுல், நோக்கத்தைத் தன்னுள்ளே செலுத்த வேண்டு மென்று கற்பித்த பயிற்சி ; ஆபத்து வரும்போது புலனிழந்து போகாமல் காக்கும் பயிற்சி; மரணத்தை இகழவேண்டுமென்ற பயிற்சி ; உடன் வாழும் மனிதருக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்த வேண்டுமென்ற பயிற்சி ; பின்ன வஸ்துக்களில் அகண்ட வஸ்துவைப் பாரென்று காட்டிய பயிற்சி : மேலும் இவ்வுலகம் உயிருடையதென்றும், இத னுள்ளே ஒரு ஆத்மா ததும்புகிறதென்றும், இது வெறுமே யதிர்ச்சை யென்னும் பெரிய பேயினுலோ, அல்லது காரணமாத்ரமாக எங்கோ தொரேயொட் டிய வானமொன்றில் மறைந்து கிடக்கும் தேவனுலோ செய்து டப்பட்ட யந்திரமில்லே யென்றும் விளக்கிய பயிற்சி! அநாதியாகிய கிழக்குத் திசையில் ஜப்பான் மலர்ந்தாள் ; தாமரைப் பூவொன்று தான் பிறந்த ஆழத்தில் பலமான பிடிப்பு வைத்துக்கொண்டு எளிய விலாஸ்த்துடன் மலர்வதுபோல மலர்ந்தாள்.

பழைய கிழக்கின் (ஆசியாக் கண்டத்தின்) குழந்தையாகிய ஜப்பான் அச்சமின்றிப் புதிய காலத் தின் பேறுகளை யெல்லாம் தனக்கு வேண்டுமென்று கேட்டாள். சோம்பேறிகளின் மனதில் திரளும் கு ப் ைப க ளு ம், பூட்டுத் திறவுகோல்களினல் அபாயத்தை விலக்க நினைப்பனவும் ஆகிய வழக்கச் சிறைகளை உடைத்து வெளியேறித் தனது தைரியத் தைக் காண்பித்தாள். இங்ஙனம் அவள் உயிருடைய