பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூரின் ஐம்பெருங்கட்டுரைகள்

புங்கள். ஒவ்வோரசைப்பிலும் அத்தேர் ம் அபரிமிதமான ஜீவ பலியையும் ஸ்வதந்த்ர யயும் இயன்ற வரை சுருக்கப்படுத்துங்கள். தலைமுற்ைகளாக நீங்கள் உங்கள் தேசத்துக்குரிய தனிவழியிலே உணர்ந்தும், எண்ணியும், தொழில் செய்தும், இன்புற்றும், தொழுதும் வந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் பழங் கந்தை போலே கழற்றி யெறிதல் இயலாது. இந்த வழி உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. உங்கள் எலும்பின் மஜ்ஜைக்குள், தசைக்குள், மூளை நினத்துக்குள் கலந்திருக்கிறது. நீங்கள் கை வைப்பதிலெல்லாம் அது தொழில் செய்ய வரும். உங்களுக்குத் தெரியாமலே வரும்; உங்களிச் சையை மீறியும் வரும்.

முற்காலத்தில் நீங்கள் மானுஷிக விவகாரங்களை உங்களுக்குத் திருப்தியாகவே தீர்த்துக் கொண் கர்கள். உயிரைப்பற்றிய உங்களறிவு, வாழ்விற்கு நீங்கள் கண்ட தனி வழி, இவற்றையெல்லாம் இக்கால நிலைமையிலே செலுத்திப் பாருங்கள். அதிலிருந்து சிருஷ்டி தோன்றும். அந்த சிருஷ்டி வெறும் அபிநயமன்று. அதை உங்கள் ஜாதியின் ஆத்மா தனதென்று கொண்டு, உலக கேடிமத்துக்கும் அதனையே தனது காணிக்கையாக இறுமாப்புடன் செலுத்தும். மேற்கேயிருந்து சேகரித்த பொருள்களை உங்களுடைய சொந்த அறிவுக்கும் அவசியத்துக்கும் தக்கபடி உபயோகித்துக் கொள்ளும் உரிமை ஆசியாக் கண்ட முழுவதும் ஜப்பானிய ஜாதி யொன் துக்கு மாத்திரந்தானிருக்கிறது. அதிருஷ்ட வசத் தால், உங்களுக்கு அன்னியரின் தொல்லே கிடையாது. ஆனல் அதற்குத் தக்கபடி உங்களுக்குப் பொறுப்பதிக ஆாகிறது. மனுஷ்ய ஸ்பையின் முன்னே ஐரோப்பா கொண்டு வந்திருக்கும் கேள்விகளுக்கு ஆசியா உங்கள் வாக்கு மூலமாகவே உத்தரங் கொடுக்க