பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதர் விளையாட்டில் ஜெயிக்கும் பொருட்டாக மனிதர் ஆத்மாவைப் பணயமென்று வைக்கும் ராஜ்யச் சூதில் அவளுடைய நவீன விருப்பம் சாய்ந்து வருகிறது. "தகுதி மிக்க தன் உயிர் மிஞ்சும்’ என்ற ஸயன்ஸ் வாக்யத்தை அவள் தனது வாயில் மீது பெரிய எழுத்தில் எழுதி வைத்திருக்கக் காண் கிறேன். அந்த வாக்யத்தின் உள் ள ர் த் த ம் யாதெனில் : உன் லாபத்தையே தேடு. அதனல் மற்றவர்களுக்கு எவ்வளவு நஷ்டமுண்டானலும் கவனிக்காதே இது குருடனுடைய மந்திரம். அவன் கண் தெரியாதபடியால் கையால் தீண்டக் கூடியதை மாத்திரந்தான் நம்புவான். ஆனல் மனிதரை இயற்கை மிகவும் நெருக்கமாகப் பின்னி யிருப்பதால், நீ பிறரை அடித்தால் அந்த அடி உன். மீது தவருமல் திரும்பி விழுமென்பதைக் கண்ணுடை ய்ோர் அறிவார். மனிதன் கண்டு பிடித்த உண்மை களிலே மிகப் பெரியது தர்ம விதி. அது யாதெனில் எவ்வளவு மனிதன் பிறருக்குள்ளே தன்னைக் காண் கிருனே அவ்வளவு உண்மை நிலேயடைகிருனென்ற ஆச்சர்யமான ஸ்த்யத்தைக் கண்டு பிடித்த செயலே யாம். இதற்கு உள்ளத்திலே விளையும் பயன் மாத்திரமேயன்றி, நமது வாழ்வில் ஒவ்வொரு சாயை யிலும் நற்பயனுண்டாகிறது. தார்மிகக் குருட்டுத் தனத்தை எந்த ஜாதியார் தேச பக்தி மதமென்று யத்தனத்தாலே பயிற்சி செய்கிருர்களோ, அவர்கள் திடீரென்று பலாத்கார மரணத்தையடைவார்கள், முற்காலத்தில் தேசங்களை அன்யர் படையேறி வருதல் உண்டு. குரூரமும், ரத்தச் சேதமும் இருக் கத்தான் செய்தன. பொருமை, லோபங்களால் சூழ்ச்சிகள் செய்வதுமுண்டு. ஆனல் அவை ஜனங் களின் ஆத்மாவை ஆழத் தீண்டின அல்ல. ஏனெனில் பொதுஜனங்கள் இந்தக் கேளிகளில் நேரே கலந்தது கிடையாது. சிலருடைய பேராசைகளினலேதான்